RBI Recruitment 2022: இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


இந்திய ரிசர்வ் வங்கி


2) வேலைவகை :


ஒப்பந்த அடிப்படை ( மூன்று வருடங்கள் )


மேலும் படிக்க | ATM vs Debit Cards: இரண்டு கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?


3) இடம் :


புவனேஸ்வர் 


4) பணிகள் :


வங்கியின் மருத்துவ ஆலோசகர்


5) பணிக்கான தகுதிகள் :


பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீரிக்கப்படும் அலோபதி மருத்துவ முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  அடுத்ததாக விண்ணப்பதாரர் மருத்துவத் துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சியாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வங்கியின் மருந்தகங்களிலிருந்து 3-5 கிமீ சுற்றளவில் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.


6) சம்பளம் :


வங்கியின் மருத்துவ ஆலோசகர் பதவிக்கு அவர்கள் பணிபுரியும் நேரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.


7) தேர்வு செய்யப்படும் முறை :


நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், சில சமயங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்களின் தகுதித் தரங்களை வங்கி உயர்த்தலாம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைக்கப்படுவார்கள்.  வங்கியின் மருத்துவ ஆலோசகராக (BMC) வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.  அத்தகைய மருத்துவப் பரிசோதனைகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.


8) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :


தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 3 வருடங்கள் மட்டுமே பணிபுரிய முடியும், ஒப்பந்தக்காலம் முடிந்த பிறகு அவர்களால் பணிக்காலத்தை புதுப்பித்துக்கொள்ள முடியாது. 
வங்கி விடுமுறை நாட்களைத் தவிர்த்து, அவர்களின் பணி நேரங்களில் மருந்தகங்களில் இருக்க வேண்டும். 
 எந்த கட்டணமும் வசூலிக்காமல் ஆலோசனை வழங்க வேண்டும், மருந்துகளை பரிந்துரைப்பது மற்றும் ஊசி மருந்துகளை இலவசமாக வழங்குவதும் ஆலோசகரின் கடமையாகும்.


9) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :


The Regional Director, 
Reserve Bank of India, 
Pandit Jawaharlal Nehru Marg, 
Bhubaneswar- 751001.


10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :


19.08.2022


மேலும் படிக்க | ITR Filing AY22-23: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ