திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று தான், ஆனால் எல்லாருமே திருமணம் செய்கிறார்களா என்றால் இல்லை.  உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே திருமணம் செய்துகொள்வதில்லை, பெரும்பாலானவர்கள் திருமணத்திலிருந்து விலகியே இருக்கின்றனர்.  சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட விரும்பும் நபர்கள் திருமண பந்தத்தை பெரிதும் விரும்புவதில்லை.  திருமணத்திற்கு பின்னர் வரும் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் போன்றவற்றின் காரணமாக பலரும் திருமணத்தை வெறுக்கின்றனர்.  தாங்கள் ஏன் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை பற்றி சில ஆண்கள் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இனி வீட்டில் இந்த அளவிற்கு மேல் தங்க நகைகள் வைத்திருக்க முடியாது!


 


சில ஆண்கள் தங்களுக்கு துணையின்றி வாழ்க்கையை வாழ முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையை கொண்டுள்ளனர், அவர்களுக்கு உடலுறவு பெரிதாக தெரியவில்லை.  தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.  பொதுவாக திருமணமானால் நம் விருப்பப்படி மட்டுமே எல்லாவற்றிலும் முடிவை எடுக்க முடியாது, நமது துணையின் தலையீடும் அதில் இருக்கும்.  இதை சில ஆண்கள் விரும்புவதில்லை, மனைவியின் கட்டளையை ஏற்றும் வாழும் வாழ்க்கையை சிலர் வெறுக்கின்றனர். உறவில் இருந்து ஒருவரது சொல்படி நடப்பதை விட தனியாக வாழ்வதே சிறந்தது என்று கருதுகின்றனர்.


சில ஆண்கள் ஓரினசேர்க்கையாளராக இருப்பதும் திருமணத்தை மறுப்பதற்கான மற்றொரு காரணம், ஓரினசேர்க்கையாளர் அவர்களுக்கான நபருடன் மட்டுமே தான் வாழ விரும்புவார்கள்.  அவர்களால் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாது, இதன் காரணமாக சில ஆண்கள் திருமணத்தை தவிர்க்கின்றனர்.  மனைவி இல்லையென்றால் தான் நினைத்த இடத்திற்கு செல்லலாம், நினைத்ததை வாங்கலாம், பிடித்தவருடன் பழகலாம் என்று சிலர் ஆண்கள் நினைக்கின்றனர்.  ஆண்கள் திருமணத்தை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்கு பின்னர் நம்மால் சுதந்திரமாக செய்லபட முடியாது என்பதேயாகும்.


மேலும் படிக்க | இந்த 7 விஷயத்தை மட்டும் உங்கள் மனைவியிடம் எதிர்பார்க்காதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ