ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம், 504 ஜிபி தரவு மற்றும் 336 நாட்கள் செல்லுபடியாகும்
ரிலையன்ஸ் ஜியோ 2121 ரூபாயில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அந்த திட்டத்தில் உள்ள நன்மைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஜியோ நிறுவனம் அதிரடியான புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜியோவின் இந்த திட்டம் ரூ.2,121 ஆகும். நீண்டகால பயன்பாட்டுக்கு ஜியோவின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு பல பெரிய நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஜியோ தனது புத்தாண்டு 2020 சலுகையை முடித்துக்கொண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜியோ நிறுவனம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது ஜியோவின் புதிய ரூ. 2,121 நீண்ட கால திட்டத்தில் பயனர்களுக்கு என்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிவோம்.
ரூ.2,121 திட்டத்தின் நன்மைகள்:
336 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவுப்படி மொத்தம் 504 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ-டு-ஜியோ வரம்பற்ற அழைப்போடு வருகிறது. அதே நேரத்தில், மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க இந்த திட்டத்தில் 12 ஆயிரம் நிமிடங்கள் கிடைக்கின்றன. டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டத்தில், ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.
ரூ.932 மற்றும் ரூ.98 திட்டத்தில் மாற்றங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ இந்த இரண்டு திட்டங்களையும் "கட்டுப்படியாகக்கூடிய திட்டங்கள்'" பிரிவில் இருந்து நீக்கியுள்ளது. இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசுகையில், 6 ஜிபி தரவு ரூ .932 ரீசார்ஜ் செய்வதில் 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஜியோ நெட்வொர்க்குகளின் வரம்பற்ற அழைப்பு கிடைக்கிறது. மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க இந்த திட்டத்தில் 3000 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 1000 இலவச எஸ்எம்எஸ் உண்டு.
98 ரூபாய் திட்டத்தைப் பற்றி பார்த்தால், பயனர்களுக்கு 300 இலவச எஸ்எம்எஸ் கொண்ட 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. 28 நாட்களில் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், ஜியோ நெட்வொர்க்குகளுக்கு வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பிற நெட்வொர்க்குகளை அழைக்க இலவச நிமிடங்களை வழங்க வில்லை. இந்த திட்டத்தின் சந்தாதாரர்கள் மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க தனித்தனியாக டாப்-அப் செய்ய வேண்டும்.