Reliance Jio Recruitment in Chennai: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சென்னை வட்டத்துக்கான (Chennai Circle Vacancy) பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் (Reliance Industries) சொந்தமான மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தற்போது அதன் 22 வட்டங்களில் எல்டிஇ நெட்வொர்க்குகளுக்கு (LTE Networks) சேவை வழங்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆட்சேர்ப்பு (Reliance Jio Recruitment) பற்றிய விவரங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www. careers.jio.com இல் தெரிவிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பிக்கும் முன் ஒவ்வொரு பதவியின் விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ள நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


ALSO READ |  7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு DA, HRA, TA சேர்த்து ரூ .2 லட்சம் வரை சம்பளம்


விவரங்கள்:


வேலை வழங்கும் நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO)


மொத்த காலியாக உள்ள இடங்கள்: 200+


பணிக்கான இடம்: சென்னை


கல்வித்தகுதி: MBA, BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வேலை: விற்பனை அதிகாரி (Home Sales Officer), மெட்ரோ நகர்ப்புற ஜியோ பாயிண்ட் மேலாளர், ஜே.சி. மொபிலிட்டி சேல்ஸ் லீட் ஏ, நிர்வாக நிறுவன சேவை, கள பொறியாளர் முதலிய இடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்கும் முறை: www. careers.jio.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


ALSO READ |  Jio அட்டகாசமான திட்டம்! 1 முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் இந்த சலுகை பெறுங்கள்!


இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்த பிறகு, தகுதியான விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் JIO Career போர்ட்டலில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பித்த பின்னர் ரிலையன்ஸ் ஜியோவின் https://careers.jio.com இன் தளத்திற்கு சென்று மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR