Reliance Jio  வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக சென்ற வருடம் ஜியோ அறிமுகப்படுத்திய ₹ 98 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், ஜியோ (JIO) அதன் முந்தைய வருட திட்டத்தில்,  28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plans), தற்போது அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள ப்ரீ பெய்ட் திட்டத்தில்; 14 நாட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு 14 நாட்களுக்கு 1.5 ஜிபி 4 ஜி தரவு கிடைக்கும். சலுகையின் மொத்த தரவு 21 ஜிபி ஆகும், தினசரி வரம்பு 1.5 ஜிபி ஆகும்.


இதில் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பும் உள்ளது. இதில், Jio Apps - JioCloud, JioTV, JioNews, JioCinema மற்றும் JioSecurity ஆகியவற்றில் இலவச சந்தாவும் இதில் அடங்கும்.


ALSO READ | புதிய ஐடி விதிகளை கடைபிடிக்காமல் முரண்டு பிடிக்கும் ட்விட்டர்; அடுத்தது என்ன


₹98 ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மும்பையை தளமாகக் கொண்ட டெல்கோ அமைதியாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் 1.5 ஜிபி தினசரி அதிவேக தரவையும் 14 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும் தருகிறது. இதில் ஜியோ செயலிகளுக்கான அணுகலும் அடங்கும்.


சென்ற வருடம் ரிலையன்ஸ் ஜியோ 2020 மே மாதத்தில்₹98  திட்டத்தை நிறுத்தியது. அதற்கு பதிலாக. ரூ .129 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கியது.


முன்னதாக, ஜியோ தொலைபேசி பயனர்களுக்கு கிடைக்கக்கூடிய  ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது.  ஜியோ ரூ. 39 மற்றும் ரூ. 69 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். இரு திட்டங்களும் 14 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பை உள்ளடக்கியது. எனினும், ரூ. 39 திட்டதில் ஒரு நாளைக்கு 100MB தரவு மட்டுமே கிடைக்கும், அதே நேரத்தில் ரூ. 69 திட்டத்தில் தினசரி 0.5 ஜிபி தரவினை பெறலாம்.


ஜியோ சமீபத்தில் 300 நிமிட இலவச அழைப்பு மற்றும் அதன் ஜியோ தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு ஒன்று வாங்கினால், ஒன்றில் சலுகை என்ற திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் சலுகைகளையும் வழங்கியது.


ALSO READ | Aadhaar-PF இணைப்பு கட்டாயம்; இணைக்கவில்லை என்றால் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR