EMV chip இல்லாத பழைய ATM அட்டைகள் ஜனவரி 1-ஆம் நாள் முதல் செல்லாது என RBI தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்த அறிவிப்பினை ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் 31-ஆம் நாளுக்கு முன்னதாக EMV chip இல்லாத ATM அட்டைகளுக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு EMV chip பொறுத்தப்பட்ட ATM அட்டைகளை வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.


இதற்கான காலக்கெடு இன்றோடு முடிவடையும் நிலையில் EMV chip இல்லா ATM அட்டைகள், நாளை முதல் செயல்பாடது என தகவல்கள் தெரிவிக்கின்றன. EMV chip இல்லாத Magstripe அட்டைகளால் அதிக அளிவில் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வதால், பாதுகாப்பு நலன் கருதி Magstripe அட்டைகளுக்கு பதிலாக EMV chip / EMV Pin அட்டைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Magstripe அட்டைகள் எப்படி இருக்கும்?...



ATM அட்டைகளுக்கு பின்புறம் கருமை நிற பட்டை இருக்கும். ஆனால் EMV chip அட்டைகளில் கூடுதலாக முன்புறம் chip ஒன்று பொறுத்தப்பட்டிருக்கும்.


இதுவரை இந்த EMV chip அட்டைகளை வாங்கவில்லை என்றால், உடனடியாக உங்கள் வங்கியின் Home Branch-யை அனுகவும். அல்லது இணைய வழி வங்கி சேவை மூலமும் உங்களது EMV Chip ATM அட்டையினை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.