மகாராஷ்டிராவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!
மகாராஷ்டிராவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதலர் தினம் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் ஆண்டுதோறும் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள், தெருவில் நாங்கள் எந்த ஒரு தம்பதியையும் கண்டால் அவர்களை வன்மையாக கண்டிப்போம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.