புது தில்லி: கொரோனா தொற்றுநோயைத் தவிர்க்க ஒவ்வொருவரும் இந்நாட்களில் முகக்கவசங்களை (Facemask) பயன்படுத்துகின்றனர். துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள், மருத்துவ சர்ஜிகல் முகக்கவசங்கள் என இவை பலவகைப்படும். மக்கள் பெரும்பாலும் துணி அல்லது சர்ஜிகல் முகக்கவசங்களையே பயன்படுத்துகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் சர்ஜிக்கல் மாஸ்குகளில் வரும் ஒருமுறை பயன்பாட்டு மாஸ்குகளை, அதாவது டிஸ்போசபிள் மாஸ்குகளை (Disposable Mask) மக்கள் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.


டிஸ்போசபிள் மாஸ்குகளை ஒரு முறைக்கு மேல் மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


டிஸ்போசபிள் மாஸ்குகள் அதிகபட்சமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கோ, அல்லது, ஒரு முறை பயன்படுத்தும் போது மட்டுமே வெளியிருந்து வரும் மாசு, தொற்று ஆகியவற்றை நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் வல்லமை கொண்டிருக்கும். அவற்றை பல நாட்களுக்கு பயன்படுத்துவது, பயன்பாட்டிற்கான நோக்கத்தையே மாற்றி விடும். அவற்றால் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பதுமட்டுமல்லாமல், அவை நம் உடலுக்கு ஆபத்துகளையும் உண்டுபண்ணலாம்.


மக்கள் இதற்கு பதிலாக துணி மாஸ்குகளை பயன்படுத்தலாம், ஆனால் அவற்றை தினமும் சுடுநீரில் நன்கு துவைக்க வேண்டும்.


மக்கள் மாசு மற்றும் கொரோனா தொற்றுநோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மூன்று அடுக்கு மாஸ்க் அல்லது என் -95 முகக்கவசங்களைப் பயன்படுத்தலாம்.


 எனினும், இன்றும் கூட, வீட்டை விட்டு வெளியேறும்போது பலர் பல முறை முகக்கவசங்களைப் பயன்படுத்துவதில்லை. தொற்றுநோயைத் தவிர்க்க இந்த நாட்களில் எல்லோரும் முகக்கவசங்களை அணிய வேண்டியது மிக அவசியமாகும். இது அவர்களைப் பாதுகாக்கும்.


ALSO READ: சென்னையில் மூன்றில் ஒருவரது உடலில் COVID-19-க்கான antibody-க்கள் உருவாக்கியுள்ளன: ஆய்வு


சில நோயாளிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் சிகிச்சை பெறும் மக்கள் தங்களை வேறு நடவடிகைகளில் ஈடுபடுத்தி பிஸியாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் உத்வேகம் தரும் வீடியோக்களை பார்க்கலாம். நேர்மறையான எண்ணங்களை வித்திடும் மக்களுடன் பேசலாம். இப்படிச் செய்வது நோயை எதிர்த்துப் போராடுவதை எளிதாக்கும்.


மேலும், மனச்சோர்விற்கு முக்கிய காரணங்களில் உணவும் முக்கியமான ஒன்றாகும். தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும், சிகிச்சையில் இருப்பவர்களும், பொதுவாக அனைவருமே இந்த நாட்களில், அப்போது செய்யப்பட்ட ஃப்ரெஷ்ஷான உணவை, வீட்டில் செய்த உணவையே சாப்பிட வெண்டும்.


மக்கள் ஜங்க் ஃபுட் (Junk Food) சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வைட்டமின் சி மருந்துக்கு பதிலாக எலுமிச்சை மற்றும் நெல்லிக்காயை அதிகமாக உட்கொள்ளலாம். இவை நமக்கு மருந்தை விட அதிகமான வைட்டமின்களைக் கொடுக்கும். இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் நோயை எதிர்த்துப் போராட உதவும்.


ALSO READ: COVID Update: இந்தியாவில் மீண்டும் அதிகரித்தது தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR