RRB Exam 2020: ரயில்வே காலியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 15 முதல்
RRB Exam 2020: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (The Railway Recruitment Board) டிசம்பர் 15 முதல் பல்வேறு வேலைகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கவிருக்கிறது
RRB Exam 2020: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (The Railway Recruitment Board) டிசம்பர் 15 முதல் பல்வேறு வேலைகளுக்கான தேர்வுகளை நடத்தத் தொடங்கவிருக்கிறது.
இந்த தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகள் (admit cards) மற்றும் தேர்வு மையங்களின் விவரங்கள் தொடர்பாக டிசம்பர் 5 முதல் அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கும். ரயில்வே அமைச்சகம் மற்றும் பிரத்யேக பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் டிசம்பர் 15 முதல் நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது.
RRB-NTPC, Level 1, மற்றும் RRB-Group D-க்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. NTPC தேர்வு மற்றும் குரூப் டி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள், ரயில்வே வெளியிடும் RRB 2020-இன் அட்டவணைக்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் என்டிபிசி மற்றும் குரூப் டி தேர்வுகளின் அட்டவணை மற்றும் நேர அட்டவணையை ஆர்ஆர்பி வெளியிடும் என்ற அவர்களின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
முன்னதாக, RRB அலகாபாத் தலைவர் ஆர்.ஏ.ஜமாலி (RA Jamali), அமைச்சர் மற்றும் பிரத்யேக பிரிவுகளுக்கான தேர்வுகளுக்குப் பிறகு விரைவில் NTPC -இன்(தொழில்நுட்பம் அல்லாத வகைகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
Also Read | Indian Coast Guard Recruitment 2020: 10ஆம் வகுப்பு பாஸா? விண்ணப்பிக்கலாம்
இலவச ரயில் பயண வசதியைத் தேர்வுசெய்த எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இலவசமாக பயணம் செய்வதற்கான உத்தரவையும் (free travel authority) ரயில்வே தேர்வு வாரியம் வெளியிடலாம்.
இதற்கிடையில், RRB NTPC, அமைச்சகம் மற்றும் RRB Group D என மொத்தம் 1.4 லட்சம் காலியிடங்களுக்காக, 2.40 லட்சம் விண்ணப்பங்களை (Applications) ரயில்வே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
RRB தேர்வு 2020 க்கான அட்மிட் கார்டுகள் டிசம்பர் 5 முதல் வெளியிடப்படும், அதே நேரத்தில் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
RRB Exam 2020 தேர்வை நடத்துவது எளிதல்ல. மிகப் பெரிய அளவிலான தேர்வர்கள் பங்கு பெறும் தேர்வை நடத்துவதற்கு பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும். டிசம்பர் 15 முதல் 23 வரை அமைச்சகம் மற்றும் பிரத்யேக பிரிவுகளுக்கான 1,663 காலியிடங்கள் RRB தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன. RRB NTPC பிரிவில் 35,208 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டது. அதற்கு 1.2 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. RRB Group D பிரிவில் 1,03,769 பணியிடங்களுக்கு மொத்தம் 1,15,67,248 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.
Read Also | SBI recruitment 2020: 8500 வேலைவாய்ப்புகள், எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR