Indian Coast Guard Recruitment 2020: 10ஆம் வகுப்பு பாஸா? விண்ணப்பிக்கலாம்

இந்திய கடலோர காவல்படை காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தவிருக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு  விண்ணப்பிக்கலாம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2020, 10:03 PM IST
  • இந்திய கடலோர காவல்படை காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது
  • நல்ல சம்பளம், இளைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்பு
  • கல்வித் தகுதி என்ன தெரியுமா?
Indian Coast Guard Recruitment 2020: 10ஆம் வகுப்பு பாஸா? விண்ணப்பிக்கலாம் title=

Indian Coast Guard Recruitment 2020: இந்திய கடலோர காவல்படை காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தவிருக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு  விண்ணப்பிக்கலாம்

இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2020: இந்திய கடலோர காவல்படை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 10வது படித்தவர்களும் விண்ணப்பிக்க்கலாம் என்று அறிவித்துள்ள பணி என்ன தெரியுமா?  Navik, Domestic Branch (Cook & Steward)) பணிக்கான அறிவிப்பு தான் இது. வெறும் 50 இடங்கள் மட்டுமே காலியாக இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் பணி நியமனம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.   

பொதுப்பிரிவினருக்கு 20, OBC-க்கு 14, SC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 8, பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களுக்கு (EWS) 5, ST பிரிவுக்கு 3 காலியிடங்கள் என இந்த 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். joinindiancoastguard.gov.in இல் டிசம்பர் 7 அல்லது அதற்கு முன்னதாக  விண்ணப்பிக்கலாம்.

ஆட்சேர்ப்பு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (admit card) டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படும். காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்வு 2021ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும்.

சரி ஊதியம் என்ன தெரியுமா? இதோ பணிக்கான மாதாந்திர சம்பள விவரங்கள்:

இந்திய கடலோர காவல்படை Navik Pay scale: அடிப்படை ஊதிய விகிதம் (Basic Pay Scale) 21,700 ரூபாய் (Pay Level-3) மற்றும் Dearness Allowance மற்றும் பிற அலவன்சுகள். அதோடு, பணியிடத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது அமல்படுத்தப்படும் விதிமுறைகளின் படி அலவன்சுகள் கிடைக்கும்.

இந்திய கடலோர காவல்படைக்கான இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு: 2021 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று, விண்ணப்பிப்பவரின் வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி (Educational Qualification): விண்ணப்பதாரர் மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (மதிப்பெண்களில் SC / ST விண்ணப்பதாரர்களுக்கும், தேசிய விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த கட்ஆப்பில் 5% தளர்வு வழங்கப்படும்.தேசிய சாம்பியன்ஷிப் / மாநிலங்களுக்கு இடையிலான தேசிய அளவிலான போட்டிகளில் (எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும்) முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் 5% தளர்வு கிடைக்கும்).

Also Read | SBI recruitment 2020: 8500 வேலைவாய்ப்புகள், எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு: முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்ப தேதி தொடங்கும் நாள்   30-11-2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-12-2020 மாலை 5 மணி வரை

e-Admit card அச்சிடுவதற்கான தேதி: 2020 டிசம்பர் 19 முதல் 25 வரை

தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2021 தொடக்கத்தில்...

மண்டல வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவது: 2021 மார்ச்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் INS Chilkaவில் சேரும் சமயம்: 2021 ஏப்ரல்

Also Read | SBI recruitment 2020: 8500 வேலைவாய்ப்புகள், எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 
zeenews.india.com/tamil/topics/

Trending News