புதுடெல்லி: இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை மூன்று நிலைகளில் முடிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக நாடு முழுவதும் ரயில்வே பெரிய அளவில் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணித்திட்டத்தின் மூலம் 1.4 லட்சம் காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். இதற்கு 2 கோடி 44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இந்த ஆவணத்தை அளிக்க வேண்டும்


இந்தியன் ரயில்வே (Indian Railway) ஆட்சேர்ப்பு பணிகளை டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நிறுத்தப்பட்டது. தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தற்போது ரயில்வே முடித்துள்ளது. கோவிட் நெறிமுறை தேர்வு மையங்களில் முழுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வில் பங்குகொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், தாங்கள் COVID-19 பரிசோதனை செய்து கொண்டதையும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிபடுத்தும் ஒரு அறிக்கையையும் அவர்கள் அளிக்க வேண்டும்.


இந்த அறிவிப்பு பத்திரத்தை அளிக்காதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது.


மூன்று முக்கிய கட்டங்கள்:


ஆட்சேர்ப்பு செயல்முறை மூன்று கட்டங்களில் முடிக்கப்படும்:


1. முதல் கட்டத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். இது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும். இது அமைச்சக பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.


2. இரண்டாவது தேர்வு சிபிடி, அதாவது நான் டெக்னிகல் பாப்புலர் பிரிவுக்கான சிபிடி இரண்டாம் கட்ட தேர்வாகும். இது டிசம்பர் 28, 2020 முதல் மார்ச் 2021 வரை நடக்கும்.


3. மூன்றாவது கட்டம் ஏப்ரல் 2021 இல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிபிடி லெவல் 1 க்கான தேர்வாக இருக்கும். இது அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை நடக்கும்.


ALSO READ: ரயில்வேயில் 1000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது


தேர்வு எழுத வரும் அனைவரும் RRB, அதாவது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (Railway Recruitment Board) கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொரோனா காலத்தில் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து இந்தியன் ரயில்வே இந்த ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்துகிறது. ஆகையால் தேர்வு எழுத வரும் அனைவரும் கண்டிப்பாக அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் (Corona Protocols) பின்பற்ற வேண்டும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. 


ALSO READ: ரயில் பயணிகளின் கவனத்திற்கு: டிக்கெட் புக்கிங்கில் புதிய மாறுதல்களை செய்தது IRCTC


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR