நம்மில் பலருக்கு வங்கி லாக்கரில், நகைகள் மட்டுமல்லாது பணத்தையும் ஆவணங்களையும் வைக்கும் பழக்கம் உள்ளது. பணத்தை வங்கியில் வைத்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புவதும் இதற்கு ஒரு காரணம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், பணத்தை வங்கி லாக்கரில் வைப்பது ஒரு வகையில் பாதுகாப்பானது அல்ல என்பதை குஜராத்தில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.


குஜராத்தில் (Gujarat) வதோதராவில் உள்ள வங்கி லாக்கரில் சுமார் 2 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. வங்கியின் லாக்கரில் பணத்தை வைத்திருந்தவர், தனது பணத்திற்கு இந்த கதி ஆகும் என ஒருபோதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.


வங்கியில் வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் பணத்திற்கு நேர்ந்த கதி
குஜராத் வதோதராவில் (Vadodara) வசிக்கும் குதுபுதீன் தேசர்வால், வங்கியில் வைக்கப்பட்டுள்ள பணத்த்திற்கு நேர்ந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். பணம் முழுவதையும் கரையான அரித்துவிட்டது. ரூ .2 லட்சம் இழப்பு என்பது குதுபுதீனுக்கு மிகப்பெரிய இழப்பு. 


குதுபுதீன் 2 லட்சம் 20 ஆயிரம் ரூபாயை பாங்க் ஆப் பரோடாவின் லாக்கரில் வைத்திருந்தாதாக கூறப்படுகிறது. பாங்க் ஆப் பரோடாவின் இந்த கிளை குஜராத்தின் வதோதராவின் பிரதாப் நகரில் அமைந்துள்ளது.


பாதிக்கப்பட்டவர் வங்கி  இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்


 வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பணத்தை கரையான் அரித்து விட்டதை அறிந்த் பின்னர் குத்புதீன் பாங்க் ஆப் பரோடாவின் வங்கி மேலாளருக்கு புகார் அளித்தார். குத்புதீன் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மொத்த பணமும் திரும்ப தரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.


வங்கி ஊழியர்களின் அலட்சியம் என குற்றசாட்டு
வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள ரூபாயை கரையான் அரித்த சமபவத்திற்கு பின்னர், வங்கியில் வைக்கப்படும் ரூபாய் மற்றும் ஆவணங்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. வங்கி ஊழியர்களின் அலட்சியம் குறித்தும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


ALSO READ | Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR