Acts of God: புதிய வங்கி லாக்கர் விதிகளின்படி, பொருட்கள் தொலைந்தால் வங்கியின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது
லாக்கர் மேலாண்மை குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களால் யாருக்கு நட்டம் அதிகம் தெரியுமா?
புதுடெல்லி: வங்கியின் பாதுகாப்புப் பெட்டக வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன. அது மட்டுமல்லாமல், தங்கள் உடைமைகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) நிர்ணயித்துள்ள, வங்கி லாக்கர் தொடர்பான விதிமுறைகளின்படி, லாக்கர்களில் தீ விபத்து நிகழ்ந்தாலும்,, திருட்டு போனாலும், கட்டிடம் இடிந்து விழுந்து பொருட்கள் நாசமானாலும், அல்லது வங்கி ஊழியர்கள் மோசடி செய்தாலும் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் சொத்துக்கு வங்கிகளின் பொறுப்பு முன்பு இருந்ததை விட குறைந்துவிட்டது. வங்கியின் பொறுப்பானது, அது வசூலிக்கும் லாக்கரின் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்று மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
லாக்கர் மேலாண்மை (locker management) குறித்து ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகளுக்கும் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் புதிய மற்றும் தற்போதுள்ள லாக்கர்கள் மற்றும் வங்கிகளில் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
READ ALSO | அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும்- Madras HC
2022 ஜனவரி முதல் தேதியில் இருந்து திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைக்கு வரும் (தனியாக வேறு எந்த சிறப்பு விதிவிலக்குகளும் அறிவித்தால் அவற்றைத் தவிர). புதிய மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு பெட்டகம் மற்றும் வங்கிகளிடம் பாதுகாப்பாக இருக்கும் பொருட்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும்" என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. .
லாக்கரை ஒதுக்கீடு செய்வதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் வங்கிகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், லாக்கர்கள் ஒதுக்கீடு செய்யப்படாதவர்களுக்கு காத்திருப்போர் பட்டியல் எண்ணை (Waitlist numbers) வழங்க வேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
RBI ஏன் வங்கி லாக்கர்கள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது?
ஆறு மாதங்களுக்குள் லாக்கர் மேலாண்மை தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மோகன் எம் சட்டன்னகவுடர் (Mohan M Shatanagoudar) மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு, ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி இனிமேல் வங்கியின் பொறுப்பானது, அது வசூலிக்கும் லாக்கரின் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்று மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
Also Read | அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது - அண்ணாமலை
எனவே, லாக்கர்களில் தீ விபத்து நிகழ்ந்தாலும்,, திருட்டு போனாலும், கட்டிடம் இடிந்து விழுந்து பொருட்கள் நாசமானாலும், அல்லது வங்கி ஊழியர்கள் மோசடி செய்தாலும் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் சொத்துக்கு வங்கிகளின் பொறுப்பு முன்பு இருந்ததை விட குறைந்துவிட்டது.
வங்கி ஊழியர்களின் தீ, திருட்டு, கட்டிடம் இடிந்து விழுந்தால் அல்லது மோசடி செய்தால் வங்கிகளின் பொறுப்பு அதன் ஆண்டு வாடகைக்கு 100 மடங்கு மட்டுப்படுத்தப்படும். எனவே, லாக்கரின் உள்ளடக்க இழப்புக்கு வங்கிகள் இனி எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் கூற முடியாது. வாங்கும் லாக்கர் வாடகையின் 100 மடங்கு இழப்பீட்டை கொடுக்கவேண்டும்.
எனவே, இனிமேல் வங்கி லாக்கரில் பொருள் பத்திரமாக இருக்கிறது, தொலைந்து போனால் வங்கியே காரணம் என்று வாடிக்கையாளரும் சொல்ல முடியாது, அதேபோல, எங்களுக்கு பொறுப்பில்லை என்று வங்கியும் கைகழுவிவிட முடியாது.
வங்கிகளின் அலட்சியம் காரணமாக லாக்கர்களின் உள்ளடக்கத்திற்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்பை விவரிக்கும் ஒரு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையை வகுக்க வேண்டும்.
READ ALSO | Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இனி லாக்கர் வாடகை எவ்வளவு?
வங்கிகள் தங்களது வாடிக்கையாளருக்கு பாதுகாப்பு பெட்டகங்களை ஒதுக்கீடு செய்யும் போது, வங்கிகள் ஒரு கால வைப்புத்தொகையைப் பெற அனுமதிக்கப்படுகின்றன. இது மூன்று வருட வாடகை மற்றும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளால் லாக்கரை உடைக்கும் சந்தர்ப்பம் வந்தால், அதற்கான கட்டணங்கள் ஆகும்.
எவ்வாறாயினும், வங்கிகள் தற்போதுள்ள லாக்கர் வைத்திருப்பவர்களிடமிருந்தோ அல்லது திருப்திகரமான செயல்பாட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தோ இத்தகைய கால வைப்புத்தொகையை கோரக்கூடாது.
Also Read | பெரியார் பல்கலைக் கழகத்தில் RSS கருத்துக்கள் திணிப்புக்கு தலைவர்கள் கண்டனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR