Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண், மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பது (live-in relationship) தவறு என்பது மட்டுமல்ல, சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2021, 03:50 PM IST
  • திருமணத்தை தாண்டிய உறவுசட்டவிரோதமானது
  • ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • போலீஸ் பாதுகாப்பு கோரிய பெண்ணின் மனு மீதி நீதிமன்றம் தீர்ப்பு
Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு title=

குடும்பம் என்ற அமைப்பு தான் மனித வாழ்க்கையின் ஆணிவேர் என்று நம்பும் கலாச்சாரத்தை பின்பற்றுகிறது இந்தியா. உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடு பாரத நாடு.

ஆனால், குடும்பம் என்ற ஸ்தாபனத்தில் இருந்தாலும், தங்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆசை, தேவை என பல்வேறு காரணங்களால் ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் திருமண பந்தம் இல்லாமல் இருப்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவருகிறது. உறவுகள் தொடர்கதையாக இருந்தாலும், உறவை முறித்துக் கொள்ளாமல் அதாவது மணமானவர்கள் விவாகரத்து பெறாமல் மற்றொருவருடன் சேர்ந்து வாழ்கின்றனர்.

இதுபோன்ற ஒரு விவகாரத்தில், அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம். திருமணமான பெண், மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பது (live-in relationship) தவறு என்பது மட்டுமல்ல, சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு வாத-விவாதங்கள் நடைபெறும் சர்ச்சைகள் உருவாகும் என்றாலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அண்மையில் தனது தீர்ப்பை ஆணித்தரமாக தெரிவித்துள்ளது.

Also Read | 4 மட்டுமல்ல, 40 முறை திருமணம் செய்து கொள்ள தைரியம் இருக்கிறது: நடிகை வனிதா

இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யப்படலாம், அதில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஆணுக்கும் திருமணமான பெண்ணுக்கும் இடையிலான நேரடி உறவை "சட்டவிரோதமானது" என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 12 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நீதிபதி சதீஷ்குமார் சர்மாவின் ஒற்றை நீதிபதி நீதிமன்ற அமர்வு திருமணமான பெண் ஒருவரின் மனுவை நிராகரித்தது. அந்த பெண், போலீஸ் பாதுகாப்பு கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த பெண், தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பிறகு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஜுன்ஜுனு மாவட்டத்தைச் (Jhunjhunu district) சேர்ந்த திருமணமான 30 வயது பெண் மற்றும் 27 வயது ஆண் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். மனு மீதான விசாரணையின் போது, வயது வந்த இருவரும் தங்கள் சுயவிருப்பப்படி ஒன்றாக உறவில் இருப்பதை மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

திருமணமான அந்த பெண், தனது கணவரின் உடல் ரீதியான கொடுமைகளால் பிரிந்து தனியே வாழ்கிறார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Also Read | Bizarre Truth: 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்

இந்த மனுவில் பிரதிவாதிகளான, பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு மனுதாரர்களுக்கிடையிலான உறவு "சட்டவிரோதமானது, சமூக விரோதமானது மற்றும் சட்டத்திற்கு எதிரானது" என்று கூறியதுடன், அவர்களுக்கு "பாதுகாப்பு பெற உரிமை இல்லை" என்று வாதிட்டார்.

"மனுதாரர் எண் 1 ஏற்கனவே திருமணமானவர் என்பது இரு தரப்பு ஆவணங்களையும் ஆராய்ந்ததில் தெளிவாகிறது. அவர் விவாகரத்து செய்யவில்லை ஆனால் அவர் மனுதாரர் எண் 2 உடன் நேரடி உறவில் இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், இருவருக்கும் இடையிலான நேரடி உறவு சட்டவிரோத உறவின் வகைக்குள் வருகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்தார். 

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சர்மா, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவையும் மேற்கோள் காட்டினார், அதில் இதேபோன்ற வழக்கில் போலீஸ் பாதுகாப்புக்கான கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

Also Read | Amazing Love Story: 24 வயது இளைஞனை திருமணம் செய்யும் 17 பேரக்குழந்தைகளின் 61 வயது பாட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News