ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொண்டனர்... இந்த செய்தி ஆச்சரியத்தைத் தரலாம். அதற்குக் காரணம், இரு ஆண்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற அதிர்ச்சியாகவும் இருக்கலாம். அல்லது இந்தியாவில் ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லையே என்ற ஆச்சரியமாகவும் இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டும் உண்மைதான். ஆண்கள் ஒன்றாக வாழ்வது அதிர்ச்சியாக இருந்தாலும், ஓரளவு பரவலாகி வருகிறது. இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் (Same Sex Marriage) செய்துக் கொள்ள முடியாது என்பதால், இந்த இரு ஓரின சேர்க்கை ஆண்களும் தங்களின் எட்டு ஆண்டு கால உறவை அதிகாரப்பூர்வமாக்க வெளிப்படுத்தும் 'நம்பிக்கை தரும் விழாவாக' நடத்தினார்கள்.


 முதன்முறையாக ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். 34 வயது அபய் டாங்கே மற்றும் 31 வயது சுப்ரியோ சக்ரவர்த்தி என்ற இரு ஆண்களும் டிசம்பர் 18 அன்று ஹைதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடந்த ஒரு தனியார் விழாவில் மோதிரங்கள் மாற்றி ஒன்றாக வாழும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



இந்த திருமணம் எனப்படும் நம்பிக்கை தரும் விழாவில் (promising ceremony) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் என மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர். 


இந்தியாவில் ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால், சுப்ரியோவும் அபயும் தங்களின் எட்டு ஆண்டு கால உறவை அதிகாரப்பூர்வமாக்க 'நம்பிக்கை தரும் விழாவை' நடத்தினர்.


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அபய், ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர், பெங்காலியைச் சேர்ந்த சுப்ரியோ ஒரு விருந்தோம்பல் நிபுணர்.


பெங்காலி மற்றும் பஞ்சாபி பாரம்பரியத்துடன் இந்த இரு மனங்கள் ஒன்றிணையும் திருமண விழா நடைபெற்றது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் நடைபெற்றன. இந்த ஒன்றிணைவு விழாவில் ஹைதராபாத்தில் உள்ள LGBT சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


டேட்டிங் ஆப் (dating app) மூலம் சந்தித்த இருவரும், திருமணம் செய்துக் கொள்வதாக அக்டோபர் மாதம் அறிவித்தனர். டோலிவுட் நடிகை சமந்தா ரூத் பிரபு ஓரின சேர்க்கை திருமணத்தை ஆதரித்து ட்விட்டரில் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.



இந்த இருவரின் பெற்றோரும், குடும்பத்தினரும் ஆரம்பத்தில் திருமணம் செய்வதற்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் பின்னர் அவர்களது உறவை ஏற்றுக்கொண்டதாக சுப்ரியோவின் கூறுகிறார்.


தங்களது இந்த திருமணம், பல நெருங்கிய ஜோடிகள் தங்களது LGBTQ உறவுகளை வெளிப்படையாய் சொல்லும் என்றும், அதை சமூகத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு நம்பிக்கை அளிக்கும் முதல் படி என்று சுப்ரியோ மற்றும் அபய் 
நினைக்கிறார்கள். இந்தியாவில் ஒரே பாலின உறவுமுறைக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், இன்னும் சில காலத்தில், தங்களுடைய  திருமணமும் சட்டப்பூர்வமாக்கப்படும் என்றும் இந்த இருவரும் நம்புகிறார்கள். 


தற்போது, சுப்ரியோ மற்றும் அபய் திருமணம் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவில்ல என்றாலும், வழக்கமான திருமணத்திற்கு பதிலாக, வித்தியாசமான ஜோடிகள் (queer couples) சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டவுடன், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த புதுமணத் தம்பதிகள் கூறுகின்றனர். 


Also Read | செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR