இந்தி திரையுலகின் பிரபலமான நடிகராக விளங்களும் சயிப் அலிகானின் மூத்த மகள், சாரா அலிகான். இவர், சிறுவயதிலிருந்தே அதிக உடல் எடையுடன் காணப்பட்டார். இதையடுத்து கேதார்நாத் எனும் படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்திருந்தார் சாரா. ஆனால் அவரை அப்படத்தில் பார்த்தவர்களுக்கு கொள்ளை ஆச்சரியம். காரணம் உடல் எடை அதிகமாக காணப்பட்ட சாரா, இந்த படத்தில் அடையாளமே தெரியமல் மெல்லிய தேகத்துடன் காணப்பட்டார். அதுவும் அவ்வளவு எடையையும் குறுகிய காலத்திலேயே இழந்தார். அது எப்படி தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாரா அலிகானின் அதிக எடைக்கான காரணம்:


சாரா அலிகான், சிறுவயதிலிருந்தே கொஞ்சம் எடை கூடிய குழந்தையாகத்தான் வளர்ந்தார். இதனால், பலரும் அவரை கேலி செய்வார்களாம். இவரது அதிக உடல் எடைக்கு பி.சி.ஓ.எஸ் எனப்படும் நீர்கட்டி பிரச்சனைகள் காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து, ஒரு நாள் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என முடிவெடுத்த சாரா, பதினெட்டே மாதங்களில் 40 கிலோ எடையை குறைத்தாராம். அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?


மேலும் படிக்க | Hansika: ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ ஹன்சிகாவின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?


உடற்பயிற்சி-நடனம்:


சாரா அலிகான், வியர்வை சொட்ட சொட்ட ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்வாராம். அது மட்டுமன்றி, தனது டயட்டையும் ஸ்ட்ரிக்டாக கடைப்பிடித்தாராம் சாரா. கதக் நடனத்தை கற்றுக்கொண்ட இவர், அதன் மூலம் தனது உடலுக்கு கச்சிதமாக வளைவை கொடுத்துக்கொண்டார். அடுத்தபடியாக ப்ராணாயாமம், சூர்ய நமஸ்காரம் போன்ற யோகா பயிற்சிகளையும மேற்கொண்டு வந்துள்ளார் சாரா. 


அதிக எடையை இழப்பதற்கு சாரா அலிகானிற்கு சில ஆண்டுகள் பிடித்தது. இதற்காக ஒரு வெயிட் லாஸ் சார்டை தயாரித்து அதன் படி பல மாதங்கள் வாழ்ந்தாராம் சாரா. 


விளையாடுவது:


சாரா அலிகானின் உடல் எடை இழப்பில் முக்கிய பங்கு வகித்தது, அவரது விளையாட்டு நடவடிக்கைகள்தான். அப்பா, அம்மா மற்றும் தம்பியுடன் டென்னிஸ் விளையாடுவாராம், சாரா. ஒரு நாளில் 2 மணி நேரம் டென்னிஸ் விளையாடி அதன் மூலமாகவும் அதிகளவில் உடல் எடையை இழந்தார். டென்னிஸ் தவிர தனது சகோதரர் உடன் ரக்பி விளையாடவும் அவருக்கு ரொம் பிடிக்குமாம். 


குறைந்த கொழுப்புடைய உணவுகள்:


அதிக கொழுப்பு இல்லாத உணவுகளை எடுத்துக்கொண்டாராம் சாரா அலிகான். உடற்பயிற்சி நடவடிக்கைகளைத்தாண்டி தனது டயட்டை எந்த காரணத்திற்காகவும் விடாமல் கடைப்பிடித்தாராம். ஃபைபர் நிறைந்த பழங்களை உட்கொள்வது, கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது என இருந்தாராம் சாரா. காலையில் எழுந்தவுடன் க்ரீன் டீ அல்லது தேன் கலந்த லெமன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார் சாரா. 


ஒரே நாளில் குறைக்க முடியாது..


நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அதை நினைத்தவுடன் நினைத்த நொடியில் செய்து விட முடியாது. சாரா அலிகானிற்கும் அப்படித்தான். அவருக்கு முழுமையாக உடல் எடையை குறைக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இருப்பினும், மனதில் தீர்க்கமாக முடிவெடுத்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினால் நீங்களும் வெற்றி பெறலாம். 


மேலும் படிக்க | Actor Vikram: இத்தனை வயதிலும் இவ்வளவு இளமை..விக்ரமின் கட்டுமஸ்தான உடலிற்கு ‘இந்த’ டயட்தான் காரணமா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ