ஆலயங்களின் நகராம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று சாரங்கபாணி கோவில். திருக்குடந்தை என்ற பெயரைக் கொண்ட சாரங்கபாணி கோவிலில் அன்னையின் நாமம் தாயார் கோமளவல்லி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

108 திவ்ய தேசங்களில் இது 12 -வது திவ்விய தேசமான  சாரங்கபாணி கோவில் பெருமாள் வைதிக விமானத்தின் கிழக்கு பகுதியை நோக்கி சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை.


சாரங்கபாணி கோமளவல்லி மற்றும் மஹாலக்ஷ்மியுடன் கோவிலில் அருள் புரிகிறார். சாரங்கபாணி நாவினில் பிரம்மனுடன், தலையில் சூரியனுடன் காட்சி தருகிறார். இந்த கோவில் முழுவதும் நரசிம்ம அவதாரம் பெற்ற சிலைகள் மிகவும் கலை நயமாக செதுக்கப்பட்டு உள்ளது.


Also Read | தாயில்லா பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்: தேர்தல் பரப்புரையில் ஆர்.பி.உதயகுமார் உருக்கம்


சாரங்கபாணி தாயாரை மணந்துக்கொள்ள தேரில் வந்தமையால் இந்த திருத்தலமும் தேரின் வடிவில் தோன்றியது. கோவில் தேரின் இருபுறமும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் தேரில் அமைக்கப்பட்டுள்ளது.


சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம், மாசியில் மாசி மக தெப்ப உற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.


கோவிலின் முன்பாக அருள் பாலிக்கும் சந்தான கிருஷ்ணனை வேண்டிய பிறகு ஆலயத்திற்குள் சென்று வழிபட்டால், எண்ணிய எண்ணம் செயலாகும் என்பது ஐதீகம்.


Also Read | FreeTNTemples: அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்களை விடுவிக்க மூன்று கோடி பேர் விருப்பம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR