செவ்வாய் - சனி சேர்க்கையால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்..!!
சனியும் செவ்வாயும் பகையாளிகள் என்பதால், இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் சிக்கல்தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு ராசியிலும் 2 கிரகங்கள் இணைந்தால், அது 12 ராசிகளையும் பாதிக்கும். சனியும் செவ்வாயும் பகையாளிகள் என்பதால், இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் சிக்கல்தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். மேலும் இவை சவால்களையும், ஆபத்த்துக்களையும் ஏற்படுத்துகிறது. நிதி நெருக்கடி, உடல் நல பிரச்சனைகள், மண வாழ்க்கையில் சூறாவளி போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 7ம் தேதி வரை மகர ராசியில் செவ்வாயும் சனியும் இணைந்திருக்கிறது. பிப்ரவரி 26-ம் தேதி முதல் இந்த இரு கிரகங்களும் இணைந்திருக்கும் நிலையில் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சனி-செவ்வாய் இணைந்திருப்பது வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கும். ஏப்ரல் 7ம் தேதி வரை திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். மேலும், தொழில் பங்குதாரருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நீங்கள் கூட்டுத் தொழில் ஏதேனும் ஒரு வேலையைத் தொடங்க விரும்பினால், அதைத் தற்காலிகமாக ஒத்திவைக்கவும். இது தவிர தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி-செவ்வாய் இணைவு சாதகமாக இருக்காது. பணவீட்டில் சனியும் செவ்வாயும் இணைவதால் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் பொய் சொல்ல நேரிடலாம். புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். இது தவிர, முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். உறவுகள் மோசமடையலாம்.
கன்னி ராசி
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கன்னி ராசிக்காரர்களை பாதிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உயர்கல்வியில் தடைகள் வரலாம். இது தவிர, காதல் வாழ்க்கையில் பரஸ்பர விலகல் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR