ஏப்ரல் 2022 ராசி பலன்: ஜோதிடத்தின் படி, ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ஏப்ரல் மாதம் எந்தெந்த கிரகங்கள் எந்த ராசிக்கு மாறப்போகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

07 ஏப்ரல் 2022 அன்று கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சியாவார் (செவ்வாய்ப் பெயர்ச்சி 2022)
ஏப்ரல் மாதத்தின் முதல் ராசி மாற்றம் கும்ப ராசி-யில் நடக்க உள்ளது. இந்நாளில் செவ்வாய் கிரகம் மகர ராசியில் தனது பயணத்தை முடித்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


08 ஏப்ரல் 2022 மேஷத்தில் புதன் பெயர்ச்சி (புதன் பெயர்ச்சி 2022)
ஜோதிடத்தில், பேச்சு, வணிகம், எழுத்து, சட்டம், தர்க்கம் போன்றவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி, புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பணம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


12 ஏப்ரல் 2022 மேஷ ராசியில் ராகு பெயர்ச்சி (ராகு பெயர்ச்சி 2022)
ஏப்ரல் மாதத்தின் மிகப்பெரிய ராசி மாற்றம் மேஷத்தில் காணப்படும். பதினெட்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ராகு மேஷ ராசிக்கு வருகிறார். தீய கிரகமான ராகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் இதே நிலையில் இருப்பார். 


12 ஏப்ரல் 2022 துலாம் ராசியில் கேது பெயர்ச்சி (கேது பெயர்ச்சி 2022)
இந்த நாளில் கேதுவின் ராசியும் மாறும். கேது தற்போது விருச்சிக ராசியில் உள்ளார். கேது ஏப்ரல் 12 ஆம் தேதி துலா ராசிக்கு மாறுவார். கேது ஒரு மர்மமான கிரகமாக கருதப்படுகிறது.


13 ஏப்ரல் 2022 மீனத்தில் வியாழன் பெயர்ச்சி (வியாழன் பெயர்ச்சி 2022)
கும்பத்தில் இருந்து விலகி ஏப்ரல் 13 ஆம் தேதி, தேவகுரு வியாழன் மீனத்தில் சஞ்சரிப்பார். மீன ராசியின் அதிபதியும் வியாழன் தான் என்பது சிறப்பு. தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் சிறப்பான பலன்களை பெறுவார்கள். 


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் 


14 ஏப்ரல் 2022 மேஷ ராசியில் சூரியப் பெயர்ச்சி (சூரியப் பெயர்ச்சி 2022)
செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் சூரியனின் பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. சிம்மம் ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


25 ஏப்ரல் 2022 ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி (புதன் பெயர்ச்சி 2022)
சுக்ரனின் ராசியான ரிஷப ராசியில் புதனின் ராசி மாற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் கல்வி, வேலை, வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அனைத்து பணிகளிலும் கவனத்துடன் செயல்பட வேண்டி இருக்கும்.


27 ஏப்ரல் 2022 மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி (சுக்ரன் பெயர்ச்சி 2022)
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் வியாழனின் ராசியான மீனத்தில் நுழைவார். இந்த மாற்றத்தின் போது, மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் உச்சகட்ட கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குவதற்கு முன்னர் நன்றாக யோசித்து முடிவெடுக்கவும்.


29 ஏப்ரல் 2022 கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி (சனிப் பெயர்ச்சி 2022)
ஏப்ரல் மாதத்தில் மிகவும் சிறப்பான ராசி மாற்றம் கும்ப ராசியில் ஏற்படும். இந்த நாளில் சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிப்பார். கும்பம் சனியின் சொந்த ராசியாகும். மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | புதாதித்ய யோகம்! யோகத்தை அனுபவிக்க காத்திருக்கும் நீங்கள் கடகமா? கன்னியா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR