Savings Account Minimum Balance Latest Update: தனியார் மற்றும் பொதுத்துறை என அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB- Account Minimum Balance) பராமரிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், ஒவ்வொரு வங்கிக்கும் AMB வேறுபடுகிறது. நகர்ப்புறம், மெட்ரோ, அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கு இருக்கும் இடத்தையும் AMB சார்ந்துள்ளது. AMB தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், வங்கியால் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)


2020ஆம் ஆண்டு முதல், எஸ்பிஐ தனது அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கான AMB தேவையை தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் இருப்பிடத்தைப் பொறுத்து மாதம் சராசரியாக ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.


AMB பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 முதல் 15 வரை அபராதம் மற்றும் பொருந்தக்கூடிய வரி விகிதங்கள் விதிக்கப்பட்டது. கூடுதலாக, தங்கள் சேமிப்புக் கணக்கில், அதிக பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைகளில் பலன்களை எஸ்பிஐ வழங்குகிறது. 1 லட்சம் மாதாந்திர சராசரி இருப்பை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் வரம்பற்ற இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு உரிமை உண்டு.


மேலும் படிக்க | Post Office Job: நெருங்கும் கடைசி நாள்... 40 ஆயிரம் காலிப்பணியிடம் - சீக்கிரம் விண்ணப்பிங்க!


HDFC


நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள HDFC வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சராசரியாக 10,000 ரூபாய் மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும். அரை நகர்ப்புற இடங்களில், அவர்கள் குறைந்தபட்ச மாதம் ரூ 5,000 பராமரிக்க வேண்டும். இருப்பினும், கிராமப்புறங்களில், வங்கி தனது சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர் சராசரியாக ரூ.2,500 காலாண்டு இருப்பை பராமரிக்க வேண்டும். மேலும் AMB-ஐ பராமரிக்க தவறியவர்கள், வங்கி வாடிக்கையாளர் மீது அபராதம் மற்றும் பிற கட்டணங்களை விதிக்கிறது.


ஐசிஐசிஐ வங்கி


ஐசிஐசிஐ வங்கியின் வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு, கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச மாதம் சராசரி இருப்புத் தொகையாக 10,000 ரூபாய் மெட்ரோ அல்லது நகர்ப்புறப் பகுதிகளுக்கும், ரூ. 5,000 அரை நகர்ப்புற இடங்களுக்கும், ரூ. 2,000 கிராமப்புற இடங்களுக்கும் பராமரிக்க வேண்டும். சராசரி இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறியவர்களுக்கு, வங்கி பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ. 500, எது குறைவாக இருந்தாலும் அபராதம் விதிக்கிறது.


பஞ்சாப் நேஷனல் வங்கி


பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் காலாண்டு நிலுவை ரூ. 20,000 பராமரிக்க வேண்டும். அரை நகர்ப்புற, கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச காலாண்டு சராசரி இருப்பு முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 500 ஆக இருக்க வேண்டும்.


கோடக் மஹிந்திரா வங்கி


கோடக் மஹிந்திரா வங்கியின் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், மெட்ரோ பகுதியில் சராசரியாக 10,000 ரூபாயும், மெட்ரோ அல்லாத பகுதிகளில் 5,000 ரூபாயும் மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும். இருப்பினும், நிலுவைத் தொகையை பராமரிக்கத் தவறியதற்காக, மாதத்திற்கு தேவைப்படும் AMB-இல் 6 சதவீத பற்றாக்குறையை வங்கி விதிக்கிறது.


ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வரம்பு


நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் ஏடிஎம்களில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கின்றன. நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகளை உள்ளடக்கிய இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால், வங்கிகள் பொருந்தக்கூடிய வரிகளுடன் கட்டணங்களை விதிக்கின்றன.


கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்கு மேல் ஏடிஎம்மில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டது.


மேலும் படிக்க | விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சத்தை பெறுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ