சென்னை: நேற்று தீபாவளியில் பட்டாசுகள் வெடித்ததால் பெரிய அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்து இருப்பமோ அந்தளவிற்கு சென்னைவாசிகள் நேற்று நச்சுப்புகையை சுவாசித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாள் வழக்கமான உற்சாகமாகத்துடன் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இதனால் சென்னையில் கரும் புகை மண்டலம் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாகவே, தீபாவளி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களில்காற்று மாசு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் கெடுதலைச் செய்கிறது. மோசமான வெடிகளை வெடிப்பதாலும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதாலும் காற்று மாசு அதிகரிக்கிறது.  


மேலும் படிக்க | தீபாவளியை பட்டாசு வெடிச்சு ஜாலியா கொண்டாடுங்க! ஆனா கட்டுப்பாட்டு தேவை!


இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். 



பட்டாசு வெடித்ததால் சாலைகள் எங்கும் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, 20,000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர், வழக்கத்தை விட 500டன் குப்பைகள் தீபாவளி நாளில் அதிகமாக உள்ளது. பட்டாசு குப்பைகளை தனியாக கையாளவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தீபாவளி திருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதாவது 1 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.


மேலும் படிக்க | தீபாவளிக்கு விற்பனை அமோகம்! இது டாஸ்மாக் மது விற்பனை சாதனை


பட்டாசு வெடிக்கும் நேரம் 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவுறுத்தல் வெளியிடப்படிருந்தது.



உச்சநீதிமன்ற ஆணையின்படி, மாவட்ட அளவில்  நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்துகிறது. பாதிப்பு இல்லாமல் சுற்றுச்சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை மக்கள் கண்டு கொள்ளவில்லை.



தமிழக காவல் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்கள் 1 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க | மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ