SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும்
SBI Alert: இணைய வசதிகள் வங்கி தொடர்பான மக்களின் பணிகளை எளிதாக்கும் அதே வேளையில், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்ற வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எஸ்பிஐ எச்சரிக்கை: இந்நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகமாக செய்யப்படுகின்றன. சிறிய கடைகளிலும் கூட QR குறியீடு ஸ்கேனர்கள் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
இந்த வசதிகள் வங்கி தொடர்பான மக்களின் பணிகளை எளிதாக்கும் அதே வேளையில், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்ற வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், QR குறியீடுகள் மூலம் செய்யப்படும் மோசடிகள் பற்றி அதிகம் தெரிய வருகின்றன.
அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்கைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தெரியாத நபர்களிடமிருந்து QR குறியீட்டைப் பெற்றால், தவறுதலாகக் கூட அதை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது. இப்படி செய்தால் ஒரு நொடியில் கணக்கில் இருக்கும் மொத்த தொகையும் காலியாக்ககூடும்.
ட்வீட் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது
இந்திய சுதந்திரத்தின் அம்ருத் உத்சவின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) கீழ் நிதி விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எஸ்பிஐ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ், எஸ்பிஐ வியாழக்கிழமை ட்வீட் செய்தது, 'QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் பெறுவதா? இது நடக்காது!! QR குறியீடு மோசடி குறித்து ஜாக்கிரதை. ஸ்கேன் செய்வதற்கு முன் யோசியுங்கள், தெரியாத மற்றும் சரிபார்க்கப்படாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம். கவனமாக இருங்கள் மற்றும் SBI உடன் பாதுகாப்பாக இருங்கள்.’ என தெரிவித்துள்ளது.
வங்கி ட்வீட்டுடன் ஒரு சிறிய இன்போ கிராபிக்ஸ் வீடியோவையும் வெளியிட்டது. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் செயல்முறையை காட்டும் வீடியோவில், 'ஸ்கேன் செய்து மோசடியா? தெரியாத QR குறியீட்டை ஸ்கேன் செய்யாதீர்கள், UPI பின்னையும் எண்டர் செய்யாதீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
க்யூஆர் குறியீடு மூலம் இப்படித்தான் மோசடி நடக்கிறது
QR குறியீடு எப்போதும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பணம் பெறுவதற்கு அல்ல என்று SBI தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பணம் பெறுதல் என்ற பெயரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய மெசேஜ் அல்லது மெயில் வந்தால், தவறுதலாக கூட அதை ஸ்கேன் செய்யாதீர்கள். இது உங்கள் கணக்கில் உள்ள தொகையை ஸ்கேன் செய்யக்கூடும். QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் எப்போதும் பணம் பெற முடியாது என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் ‘சில’ வங்கிகள் விபரம் இதோ..!!!
மோசடியிலிருந்து தப்பிக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்
வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளை வங்கி வழங்கியுள்ளது.
- பணம் செலுத்தும் முன் UPI ஐடியைச் சரிபார்க்கவும்.
- UPI மூலம் பணம் செலுத்தும் போது சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
- UPI பின் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவை, பணம் பெறுவதற்கு அல்ல.
- பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்கவும்.
- UPI பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.
- UPI பின்னை தவறுதலாகக் கூட மறக்க வேண்டாம்.
- நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரை சரியாகப் பயன்படுத்தவும்.
- எந்த சூழ்நிலையிலும், உத்தியோகபூர்வ ஆதாரங்களைத் தவிர வேறு வழிகளில் தீர்வுகளை நாட வேண்டாம்.
- ஏதேனும் பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு பயன்பாட்டின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும்.
- ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வங்கியின் குறை தீர்க்கும் போர்டல் https://crcf.sbi.co.in/ccf/ மூலம் தீர்வு காணவும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச் 31-க்குள் இதை செய்தால் ஊதியத்தில் இந்த தொகையும் கூடும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR