SBI அளிக்கும் உடனடி லைஃப் கவர்: YONO செயலி மூலம் பெறலாம் 40 லட்சம் ரூபாய்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .40 லட்சம் வரை உடனடி ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷாவின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் SBI YONO செயலியின் மூலம் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீடு பெற முடியும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .40 லட்சம் வரை உடனடி ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷாவின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் SBI YONO செயலியின் மூலம் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீடு பெற முடியும். மிக எளிதாக ஒரு சில கட்டங்களிலேயே இந்த ஆயுள் காப்பிற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும். SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷா ஒரு குழு, இணைக்கப்படாத ( நான்-லிங்ட்), நான் பார்டிசிபேடிங் பியூர் ரிஸ்க் பிரீமியம் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது வெவ்வேறு முறைசார்ந்த மற்றும் முறைசாரா குழுக்களுக்கு கிடைக்கிறது.
இந்த SBI லைஃப் ஆயுள் காப்பீடு (Life Insurance) பல வகையான பயனர்களுக்கு பயனளிக்க வல்லது. முதலாளி-பணியாளர், கடன் வாங்குபவர்- பணம் டெபாசிட் வைப்புத்தொகை, தொழில் வல்லுநர்கள், பயனாளியின் உறவினர்கள் போன்ற பலதரப்பட்ட குழுக்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.
இந்த திட்டம் குழு உறுப்பினர்களை சார்ந்தவர்களுக்கு நிதி உதவி மூலம் பாதுகாப்பை வழங்குகிறது, குழுவின் தேவைகளுக்கு ஏற்ப நன்மைகளை வரையறுக்கக்கூடிய வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் எளிதான போர்டிங் செயல்முறை இருப்பதால் இது எளிமையாக அணுகத்தக்கதாக உள்ளது. SBI லைஃப் - திட்ட விதிகளால் வரையறுக்கப்பட்டபடி உறுதி செய்யப்படும் தொகை மூலம் சம்பூர்ண் சுரக்ஷா மரணத்திற்கு பிறகான பயனை வழங்குகிறது.
ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு பெரிய அறிவிப்பு! இந்த 8 சேவைகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
SBI லைஃப் - சம்பூர்ன் சுரக்ஷா உங்களுக்கு வருமான வரி சலுகைகளை அளிக்கும் / விலக்குகள் இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி வழங்கப்படும்.
SBI லைஃப் - சம்பூர்ண் சுராகாஷா: யோனோ செயலியில் விண்ணப்பிப்பது எப்படி
Step 1: SBI வாடிக்கையாளர்கள் யோனோ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Step 2: SBI யோனோ செயலியை பதிவிறக்கிய பிறகு, நீங்கள் அதில் லாக் இன் செய்ய வேண்டும்.
Step 3: நீங்கள் SBI யோனோவில் லாக் இன் செய்ததும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் ‘காப்பீடு’ பிரிவுக்கு செல்ல வேண்டும்.
Step 4: இங்கே, SBI வாடிக்கையாளர்கள் “Buy a Policy” பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
ALSO READ: BSNL-ன் அதிரடியான 47 ரூபாய் recharge plan: அரண்டுபோன Airtel, Jio, Vi
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR