சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கடன் வசதி ஓன்றை அறிமுகப்படுத்தி உள்ளது, அதன்படி வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.35 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது.  எஸ்பிஐ ரியல் டைம் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் (ஆர்டிஎக்ஸ்சி) என்று அழைக்கப்படும் இந்த அம்சமானது வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் யோனா ஆப் பயன்பாட்டில் கிடைக்கிறது.  இது 100 சதவீதம் காகிதமற்ற மற்றும் டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளப்படும் கடன் வசதியாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Masked Aadhaar: ஆதாரின் நகலை பகிரவேண்டாம்: ஆதார் எண்ணை பகிர டிப்ஸ் தரும் UIDAI 


இதுகுறித்து கடந்த மே 23 அன்று எஸ்பிஐ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், 'உங்கள் கனவுகளுக்கு ஆம் என்று சொல்லுங்கள், எங்கள் வங்கியின் தகுதியான சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கான ரியல் டைம் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் (ஆர்டிஎக்ஸ்சி)  வசதியை அறிமுகப்படுத்துகிறோம்.  யோனா ஆப் மூலம் நீங்கள் உடனடியாகவும், எளிதாகவும் ரூ.35 லட்சம் வரையிலான கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளது.  மேலும் இதுபற்றி பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் காரா கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில், தொந்தரவின்றி மற்றும் காகிதமில்லா கடனை பெற இந்த  ரியல் டைம் எக்ஸ்பிரஸ் க்ரெடிட் உதவும்.  வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை எளிதாக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வழங்க எங்கள் வங்கி முயற்சி செய்து வருகிறது என்று கூறினார்.  



எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் நபர்கள் மற்றும் மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.15,000 வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள்.  இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் மத்திய/ மாநில/ அரசு பொது நிறுவனங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், லாபம் ஈட்டும் பிஎஸ்யூக்கள், தேசிய கல்வி நிறுவனங்கள், மற்றும் வங்கியுடன் அல்லது வங்கியுடன் தொடர்பு அல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்.  தனிநபரை கடன் ஆனது குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதோடு, இது எவ்வித உத்தரவிதமும் இன்றி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR