புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான இந்திய ஸ்டேட் வங்கி, ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகச் சிறந்த ப்யூர் பிளே கிரெடிட் கார்ட் (pure-play credit card) வழங்குனரான எஸ்பிஐ, புதன்கிழமை தனது மூன்று நாள் திருவிழா கொண்டாட்டங்களைப் பற்றி தெரிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்வின் போது, அடுத்த மாதம் தொடங்கி அனைத்து உள்நாட்டு இ-காமர்ஸ் தளங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான கேஷ்பேக் நன்மைகளைப் பற்றி எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. 


Dumdaar Dus எனப்படும் மூன்று நாள் மெகா ஷாப்பிங் பண்டிகை சலுகை  அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும். இது ஒரு வகையான ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவாகும். இதன் மூலம் அனைத்து உள்நாட்டு இ-காமர்ஸ் தளங்களிலும் SBI கார்டு ரீடியில் அட்டைதாரர்கள் சுதந்திரமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும் என SBI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


ALSO READ: Cheap and Best Home Loan: மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தரும் வங்கி எது? 


இந்த சலுகைகள் ஒன்று அல்லது இரண்டு இ-காமர்ஸ் போர்ட்டல்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் 10 சதவீத கேஷ்பேக் பெறலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


"எங்கள் பகுப்பாய்வுகளை கூர்மையாக்க தரவு பகுப்பாய்வின் சக்தியை நாங்கள் நம்பியிருக்கிறோம் மற்றும் பயன்படுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், எங்கள் அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் தளங்களில், பரந்த அளவிலான தளங்கள் மற்றும் தயாரிப்பு வகைகளில், குறிப்பாக பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செய்வதை நாங்கள் கவனித்தோம். அதை அடிப்படையாக கொண்டு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது" என்று எஸ்பிஐ கார்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம மோகன் ராவ் அமரா கூறினார்.


எஸ்பிஐ கார்டு இந்த சலுகையின் மூலம் எங்கும், எப்போது வேண்டுமானாலும் அட்டைதாரர்களுக்கு வசதியான, தடையற்ற மற்றும் பாதுகாப்பான கட்டண தீர்வுகளை வழங்குவதற்கான தனது பிராண்ட் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 


EMI பரிவர்த்தனைகளின் வளர்ந்து வரும் பயன்பாடுகளுக்கு ஏற்ப, ஆன்லைன் வணிகர் EMI பரிவர்த்தனைகளிலும் இந்த சலுகை கிடைக்கும்.


2021 பண்டிகை சலுகையைப் பெருக்க, எஸ்பிஐ கார்டு பிரபலங்களுடன் இணைந்து ஒரு டிஜிட்டல் பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


மொபைல் போன்கள்  மற்றும் பாகங்கள், டிவி மற்றும் பெரிய உபகரணங்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள், வீட்டு உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை சாதனங்கள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற பலவகையான பொருட்களை வாங்குவதற்கு கேஷ்பேக் வசதி கிடைக்கும்.


இருப்பினும், காப்பீடு, பயணம், வாலட், நகை, கல்வி, சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு வணிகர்கள் போன்ற சில பிரிவுகளில் ஆன்லைன் செலவினங்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.


ALSO READ: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: இனி வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR


https://www.facebook.com/ZeeHindustanTamil
https://twitter.com/ZHindustanTamil