SBI Debit Card PIN: பொதுத்துறையின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய வசதிகளை வழங்கி வருகிறது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்தபடி டெபிட் கார்டின் பின் அல்லது கிரீன் பின் உருவாக்கும் வசதியை அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸின் (Coronavirus) அதிகரித்து வரும் தொற்றுகளை கருதில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளுக்காக தொடர்பு இல்லாத சேவையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் வீட்டில் இருந்தபடி தொலைபேசியில் வங்கி தொடர்பான பல வேலைகளைச் செய்யலாம். அதே நேரத்தில், உங்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டெபிட் கார்டு இருந்தால், அதன் PIN ஐயும் வீட்டில் இருந்தபடி உருவாக்கலாம். இதை கிரீன் சிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த பின்னை IVR அமைப்பிலிருந்தும் உருவாக்க முடியும். இந்த தகவலை எஸ்பிஐ ட்வீட் செய்வதன் மூலம் பகிர்ந்துள்ளது.


ALSO READ | இனி வங்கிக்கு போக வேண்டாம், இதை மட்டும் செஞ்சாலே போதும்!


Generate PIN through IVR
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லா எண் 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ கால் செய்யவும். உங்கள் ஏடிஎம் கார்டு மற்றும் கணக்கு எண் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், அவற்றின் விவரங்களை உடனடியாக பதிவு செய்யலாம்.


Process to generate Green PIN
-கால் இணைக்கப்பட்டதும் ​​ஏடிஎம் / டெபிட் கார்டு சேவைகளுக்கு 2 ஐ அழுத்தவும்.
- IVR மெனுவிலிருந்து PIN ஐ உருவாக்க 1 ஐ அழுத்தவும்.
- பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அழைக்கும்போது, ​​IVR உங்களை 1 ஐ அழுத்தும்படி கேட்கும் அல்லது வாடிக்கையாளர் முகவரிடம் பேச 2 ஐ அழுத்துமாறு கேட்கப்படும்.
- நீங்கள் கிரீன் PIN ஐ உருவாக்க விரும்பும் ஏடிஎம்மின் கடைசி 5 இலக்கங்களை டயல் செய்யுங்கள்.
- கடைசி 5 இலக்கங்களை உறுதிப்படுத்த 1 ஐ அழுத்தவும்.
- கடைசி 5 இலக்கங்களை மீண்டும் உள்ளிட 2 ஐ அழுத்தவும்.
-இப்போது நீங்கள் பிறந்த வருடத்தை உள்ளிட வேண்டும்.


இதற்குப் பிறகு கிரீன் PIN உருவாக்கப்படும். இது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். எஸ்பிஐயின் எந்த ஏடிஎம்மையும் 24 மணி நேரத்திற்குள் பார்வையிடுவதன் மூலம் இந்த பின்னை மாற்றலாம்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR