புதுடெல்லி: தொடர்ந்து ஓய்வூதியம் பெற, அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், SBI ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது ஜீவன் பிரமாண் பத்ர அதாவது ஆயுள் சான்றிதழை வங்கியின் எந்த கிளையிலும் அல்லது ஆன்லைனிலும் டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்க நான்கு வழிகள் உள்ளன: நபர் தானாக சென்று சமர்ப்பிப்பது, SBI வங்கி கிளையில் டிஜிட்டல் சமர்ப்பிப்பு, உமங் செயலியின் மூலம் ஆன்லைனில் சமர்பிப்பது, குடிமக்கள் சேவை மையங்களுக்கு (CSC) சென்று ஆயுள் சான்றிதழை உருகாக்குவது அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதார் சேவை மையங்கள் மூலம்.


வங்கியில் ஓய்வூதியக் கணக்கு வைத்திருக்கும் ஓய்வூதியதாரர்களுக்காக (ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவோர் தவிர) ‘SBI Pension Seva’ என்ற பிரத்யேக வலைத்தளத்தை வங்கி அறிமுகப்படுத்தியது. இந்த பிரத்யேகமான வலைத்தளம் பொது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் நோக்கம் கொண்டது. ‘SBI Pension Seva’ வலைத்தளத்தில், SBI-யில் கணக்கு உள்ள ஓய்வூதியக்காரர்கள் (Pensioners) லாக் இன் செய்து அவர்களின் ஓய்வூதியம் (Pension) தொடர்பான விவரங்களை உடனடியாக சரிபார்க்க முடியும்.


ALSO READ: ICICI வங்கியின் இந்த offer மூலம் 30 mins-ல் magic, மளிகைக் கடை online store ஆகும்


இந்த இணையதளத்தில் கிடைக்கும் சேவைகள் பின்வருமாறு:


-நிலுவை கணக்கீட்டு தாள்களின் பதிவிறக்கம்


-ஓய்வூதியம் / படிவம் 16 பதிவிறக்கம்


-ஓய்வூதிய சுயவிவர விவரங்கள்


-முதலீடு தொடர்பான விவரங்கள்


-ஆயுள் சான்றிதழ் நிலை


-பரிவர்த்தனை விவரங்கள்


பதிவு செய்வது எப்படி:


-ஒரு பயனர் ஐடியை உருவாக்கவும் (ஓய்வூதியதாரரால் உருவாக்கப்பட வேண்டும் – குறைந்தபட்சம் 5 எழுத்துக்கள்)


-உங்கள் ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிடவும்


-உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும்


-ஓய்வூதியம் செலுத்தும் கிளையின் கிளைக் குறியீட்டை உள்ளிடவும்


-உங்கள் பதிவு செய்யப்பட்ட -வங்கிக் கிளைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி


-புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு, கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்


(குறிப்பு: கடவுச்சொற்கள் குறைந்தபட்சம் 8 எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். கடவுச்சொற்களில் பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் இருக்க வேண்டும்)


-2 சுயவிவர கேள்விகள் மற்றும் பதில்களைத் தேர்ந்தெடுத்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும். உங்கள் கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால் அது தேவைப்படும்.


-வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்படும். அங்கு கணக்கு செயல்படுத்த ஒரு இணைப்பு கிடைக்கும்.


-ஆக்டிவேட் செய்த பின், ஓய்வூதியதாரர் தனது பதிவு செய்யப்பட்ட ஐடி / கடவுச்சொல் மூலம் உள்நுழைய முடியும்.


-தொடர்ச்சியாக மூன்று தோல்வியுற்ற உள்நுழைவு முயற்சிகளுக்குப் பிறகு பயனர் கணக்கு தானாகவே லாக் செய்யப்படும்.


ALSO READ: ஜன் தன் கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால் 1 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்படலாம் தெரியுமா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR