வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... SBI வழங்கும் அசத்தல் சலுகை... மிஸ் பண்ணாதீங்க!
வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. வீட்டுக் கடன் வாங்குவது ஒரு முக்கியமான முடிவு.
பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் வீட்டுக் கடன் (SBI Home Loan ): வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. வீட்டுக் கடன் வாங்குவது ஒரு முக்கியமான முடிவு. நீங்கள் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள் என்றால், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) இந்தத் திட்டம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், SBI வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்தில் 50% முதல் 100% வரை தள்ளுபடி செய்து சலுகை அளிக்கிறது. வங்கி வழங்கும் இந்த தள்ளுபடி வழக்கமான வீட்டுக் கடன்கள், ஃப்ளெக்ஸிபே, என்ஆர்ஐ போன்றவற்றுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு வங்கி சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. தற்போது வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் விலக்கு 31 ஆகஸ்ட் 2023 வரை தொடரும். இருப்பினும், இந்த விலக்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
55 அடிப்படை புள்ளிகள் வரை சலுகை கிடைக்கும்
SBI வீட்டுக் கடன் இணையதளத்தின்படி, வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனுக்கான ஒரிஜினல் கார்ட் விகிதத்தை விட 55 அடிப்படை புள்ளிகள் வரை பெறலாம். வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.5000 வரை செலுத்த வேண்டும். இது தவிர, இந்தத் தொகைக்கு தனியாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது தவிர, மறு விற்பனை வீடுகள் மற்றும் குடியேற தயாராக உள்ள சொத்துக்களுக்கு 100% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வீட்டு கடன் செயலாக்க கட்டணம்
வீட்டுக் கடன் தொகையில் 0.35% செயலாக்கக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி எந்த சலுகையும் வழங்காமல் வங்கியால் வசூலிக்கப்படுகிறது. வீட்டுக் கடன் தொகை குறைவாக இருந்தால் இந்தத் தொகை குறைந்தபட்சம் ரூ 2,000 மற்றும் அதிகபட்சம் ரூ 10,000 ஆகும். இதனுடன், ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாடிக்கையாளர் CIBIL ஸ்கோரின் அடிப்படையில் செயலாக்கக் கட்டணத்தில் விலக்கு பெறுவார்.
கிரெடிட் ஸ்கோர்
கடன் வாங்கும்போது நல்ல கிரெடிட் ஸ்கோர் (CIBIL) இருக்க வேண்டும். இது உங்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் கடன் அனுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. SBI நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்!
CIBIL மதிப்பெண் 750 - 800
CIBIL மதிப்பெண் 750-800 அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு சலுகை இல்லாமல் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9.15% ஆகும். ஆனால் சலுகையின் கீழ் 8.70% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர, CIBIL மதிப்பெண் 700-749 உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து 55 bps சலுகை வழங்கப்படும். வங்கியின் சாதாரண வட்டி விகிதம் 9.35% ஆனால் அவர்களுக்கு 8.80% வீதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும்.
CIBIL மதிப்பெண் 650 - 699
CIBIL மதிப்பெண் 650 முதல் 699 வரை இருந்தால், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சலுகையும் கிடைக்காது. அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு 9.45% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும். இதேபோல், ஒருவரின் CIBIL 550 முதல் 649 வரை இருந்தால், அவர்களுக்கு 9.65% வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்.
மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ