14,000 காலி இடங்கள்: நாட்டின் மிகப் பெரிய வங்கியில் மிகப் பெரிய ஆட்சேர்ப்பு!!
நாட்டின் மிகப் பெரிய வங்கியான SBI விரைவில் பெரிய ஆட்சேர்ப்பை நடத்தவுள்ளது. இதில் வங்கியில் பணி புரிய வேண்டும் என்ற சுமார் 14 ஆயிரம் பேரின் கனவு நனவாகும்.
புதுடெல்லி: கொரோனா காலத்தில் உங்கள் வேலை பறிபோய் விட்டதா? நீங்கள் வேலையைத் தேடுகிறீர்களா? அப்படியானால் ஒரு மிகப் பெரிய வாய்ப்பு உங்கள் கதவைத் தட்டவுள்ளது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான SBI விரைவில் பெரிய ஆட்சேர்ப்பை நடத்தவுள்ளது. இதில் வங்கியில் பணி புரிய வேண்டும் என்ற சுமார் 14 ஆயிரம் பேரின் கனவு நனவாகும்.
2.50 லட்சம் பணியாளர்கள்
தற்போது சுமார் 2.50 லட்சம் ஊழியர்கள் உள்ளனர் என்றும் இந்த ஆண்டு 14,000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தெரிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு கிட்டத்தட்ட ஒவ்வொரு பதவிக்கும் இருக்கும். இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் செயல்முறையைத் தொடங்க வங்கி விரைவில் விளம்பரங்களை வெளியிடும்.
வி.ஆர்.எஸ் திட்டத்தை 30 ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்
வங்கியின் சுமார் 30,190 ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். தற்போது (மார்ச் 2020 வரை) SBI-ல் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.49 லட்சம் ஆகும். இது ஒரு வருடம் முன்பு 2.57 லட்சமாக இருந்தது. வட்டாரங்களின்படி, வங்கி ஒரு விஆர்எஸ் திட்டத்தை (VRS Plan) உருவாக்கியுள்ளது, இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
முன்மொழியப்பட்ட திட்டம் 'செகண்ட் ஷிப்ட் டேப் வி.ஆர்.எஸ் - 2020' வங்கியின் செலவைக் குறைத்து மனிதவள பயன்பாட்டை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் வங்கியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த அல்லது 55 வயது நிரம்பிய அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கும் பொறுந்தும்.
ALSO READ: வேலை தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி.... இதன் மூலம் மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்!!
இந்த திட்டத்திற்கு 11,565 அதிகாரிகள் மற்றும் வங்கியில் பணிபுரியும் 18,625 ஊழியர்கள் தகுதி பெறுவார்கள்.
இத்திட்டம் டிசம்பர் 1 ஆம் தேதி திறந்து பிப்ரவரி வரை கிடைக்கும். அதன் பிறகு விஆர்எஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. உத்தேச தகுதி நிபந்தனைகளின்படி, 11,565 அதிகாரிகள் மற்றும் வங்கியில் பணிபுரியும் 18,625 ஊழியர்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். மதிப்பிடப்பட்ட தகுதியுள்ளவர்களில் 30 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால், 2020 ஜூலை மாத சம்பளத்தின்படி வங்கியின் நிகர சேமிப்பு ரூ .1,662.86 கோடி இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்
இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு மீதமுள்ள பதவிக்காலத்தில் 50 சதவிகிதம் அல்லது கடந்த 18 மாதங்களில் மொத்த சம்பளம் என இதில் எது குறைவான தொகையோ அது வழங்கப்படும்.
இது தவிர, அவர்களுக்கு கிராஜுவிட்டி, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ சலுகைகள் போன்ற வசதிகளும் கிடைக்கும். இருப்பினும், வங்கி தொழிற்சங்கங்கள் முன்மொழியப்பட்ட விஆர்எஸ் திட்டத்திற்கு ஆதரவாக இல்லை.
கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயின் பிடியில் நாடு இருக்கும் இந்த நேரத்தில், இந்த நடவடிக்கை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்று வங்கி தொழிலாளர்கள் தேசிய அமைப்பின் துணைத் தலைவர் அஸ்வானி ராணா கூறினார்.