SBI Scheme: பொதுவாக, வயது அதிகரிக்கும் போது, முதலீடு தொடர்பான ரிஸ்க் எடுக்கும் திறன் குறைகிறது. ஓய்வுக்குப் பிறகு, எந்தவொரு பொதுவான முதலீட்டாளரும் தனது பணம் தொடர்பாக எந்தவிதமான ரிஸ்க்கையும் எடுக்க விரும்பமாட்டார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமகனாக இருந்த பிறகு, பணத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அந்த பணத்தின் மூலம் வருமானத்தை பெருக்குவதற்கான ஆப்ஷனே இல்லை என்பது இல்லை. மூத்த குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்காக பல வங்கிகளில் டெபாசிட் திட்டங்களும், அரசாங்க திட்டங்களும் உள்ளன. இவற்றில் சிறப்பான திட்டங்களில் ஒன்று, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டம் (Senior Citizen Term Deposit Scheme). 


நீங்கள் சமீபத்தில் ஓய்வுபெற்று, உங்கள் கையில் பெரிய தொகை கிடைத்திருந்தால், எஸ்பிஐயின் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது நீண்ட காலக் கண்ணோட்டத்தில் சிறந்த தேர்வாகும்


மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு நன்மை?


எஸ்பிஐ இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, மூத்த குடிமக்கள் எஸ்பிஐயின் இந்த டெபாசிட் திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக்காக டெபாசிட் செய்யலாம். பொதுவாக, மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களை விட நிலையான வைப்புத்தொகைக்கு அரை சதவீதம் (0.50%) அதிக வட்டி கிடைக்கும். அதேசமயம், மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 1% கூடுதல் வட்டியைப் பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | இனி ATM-இல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது... இதுவும் வேண்டும் - புதிய விதி என்ன தெரியுமா?


எஸ்பிஐ இணையதளத்தின்படி, வழக்கமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 6.5 சதவீத வருடாந்திர வட்டியைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில் வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது. உண்மையில், மூத்த குடிமக்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களில் எஸ்பிஐ We-Care டெபாசிட் திட்டத்தின் கீழ் கூடுதலாக அரை சதவீத பிரீமியம் வட்டியைப் பெறுகிறார்கள்.


ரூ. 10 லட்சம், ரூ. 21 லட்சமாக மாறும்


எஸ்பிஐயின் 10 வருட முதிர்வு திட்டத்தில், ஒரு மூத்த குடிமகன் ரூ. 10 லட்சத்தை மொத்தமாக டெபாசிட் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எஸ்பிஐ FD கால்குலேட்டரின் படி, முதலீட்டாளர் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 21,02,349 பெறுவார். இதில், வட்டி மூலம் ரூ.11,02,349 நிலையான வருமானம் கிடைக்கும்.


கடந்த பிப்.15ஆம் தேதி முதல் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. வங்கிகள் சார்பில் கடன்களை அதிக விலைக்கு உயர்த்துவதுடன், வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படுகின்றன. முன்னதாக, எஸ்பிஐ FD மீதான வட்டி விகிதங்களை கடந்தாண்டு டிச.13 அன்று உயர்த்தியது.


வட்டி வருமான வரிக்கு உட்பட்டது


வங்கிகளின் நிலையான வைப்பு/கால வைப்புத்தொகை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பெரிதும் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வழி. 5 வருட வரி சேமிப்பு FDக்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், FDஇல் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். வருமான வரி விதிகளின்படி, மூலத்தில் வரி விலக்கு (TDS) FD திட்டத்தில் பொருந்தும். 


அதாவது, FD முதிர்ச்சியின் போது பெறப்படும் தொகை உங்கள் வருமானமாகக் கருதப்படும். நீங்கள் ஸ்லாப் விகிதத்தின்படி வரி செலுத்த வேண்டும். வருமான வரித்துறை விதிகளின்படி, வரி விலக்கில் இருந்து விலக்கு பெற வைப்பாளர் படிவம் 15G/15H-ஐ சமர்ப்பிக்கலாம்.


மேலும் படிக்க | SBI குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி? இதோ வழிமுறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ