SBI Senior Citizen Customers: நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கணக்கு வைத்திருப்பவர் என்றால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ மூலம் புதிய வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அனைவரும் இதனை அறிந்துகொள்ளலாம். வங்கியின் புதிய திட்டமிடலின் கீழ், வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) மூலமாக வங்கி நிர்வாகியிடமோ அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்திலோ கண்டறிய முடியும். எஸ்பிஐ நிறுவனத்திடம் இருந்து 'IRIS ஸ்கேனர்' என்ற அடையாள வசதியை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | உடைந்த நாற்காலி..பென்ஷன் பெற உச்சி வெயிலில் நடந்து செல்லும் மூதாட்டி: வீடியோ
சிரமங்களை குறைக்கும்
வங்கி அதிகாரியின் அருகில் 'IRIS ஸ்கேனர்' வசதி இருப்பதால், மூத்த குடிமக்கள் பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த வசதிக்குப் பிறகு, அவர்கள் அருகில் உள்ள 'பேங்க் மித்ரா' மையத்திலிருந்தே ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், அதன் 'பேங்க் மித்ரா' ஆபரேட்டர்களுடன் 'ஐஆர்ஐஎஸ் ஸ்கேனரை' நிறுவுவதை சோதனை செய்து வருவதாகக் கூறப்பட்டது. இது மூத்த குடிமக்கள் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சிரமங்களை குறைக்கும்.
எதற்கு இந்த திட்டம்?
'IRIS ஸ்கேனர்' உதவியுடன், எந்த நபரின் அடையாளத்தையும் கண்ணின் கருவிழிகள் மூலம் உறுதிப்படுத்த முடியும். தற்போது அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய இதே வசதி பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில், ஒடிசாவின் நவரங்பூர் மாவட்டத்தில் வயதான பெண் ஒருவர் தனது ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது விரல்கள் உறுதி செய்யப்படாததால் அவர் மிகவும் சிரமப்பட்டார். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க, IRIS ஸ்கேனர் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் எஸ்பிஐ வங்கி சார்பில் கூறப்பட்டது. இது நிச்சயமாக ஓய்வூதியம் பெறுவோருக்கும், முதியோர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஆபர்களை அள்ளி வழங்கும் வங்கிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ