ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்திற்காக வாங்கிய நிலுவையை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் லதா ரஜினிகாந்துக்கு இன்று கேள்வி எழுப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


கடந்த 2013ம் ஆண்டு  லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால்,  படத்தயாரிப்பாளரான லதா ரஜினிகாந்த் நஷ்டத்தை சந்தித்தார்.


இந்த படத்தை  தயாரிக்க ஆட்பீரோ என்ற  நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடன் அடைக்காமல் இழுத்தடித்து வந்தார்.


ஆடட் பீரோ நிறுவனம் பலமுறை முயற்சித்தும் கடன் செலுத்த ரஜினிகாந்த் தரப்பினர் முன்வராததால்,  ஆட்பீரோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.


இது தொடர்பான வழக்கில், லதா ரஜினிகாந்தின்  இடைக்கால மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், நிலுவை தொகையை செலுத்த லதாவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் லதா ரஜினிகாந்த் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல் பணத்தை கொடுக்காமல் மீண்டும் இழுத்தடித்து.


இதுகுறித்து விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெற்றது. அப்போது, பணத்தை ஏன் செலுத்தவில்லை என்றும்,  எப்போது செலுத்து வீர்கள் என்று லதா ரஜினிகாந்துக்கு கேள்வி எழுப்பிய கோர்ட் கடன் தொகையான 6.2 கோடி ரூபாயை 3 மாதத்திற்குள் ஆட் பீரோ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்துக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.


இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததில், நிலுவை தொகையை இன்னும் ஏன் செலுத்த வில்லை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.