கொரானா அறிகுறிகள் தென்பட்டால் பயப்பட வேண்டாம் என்றும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்கலாம் என்று கொரானாவால் பாதித்த பெண்ணி நம்பிக்கை வாரத்தை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. அந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரானா அறிகுறிகள் தென்பட்டால் பயப்பட வேண்டாம் என்றும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்கலாம் என்று கொரானாவால் தாக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறே குணமடைந்த அமெரிக்கப் பெண் எலிசபெத் ஷெனிடர் தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவில் கொரானா வைரஸ் அதிகம் பாதித்த வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரைச் சேர்ந்த 37 வயதுடைய எலிசபெத் ஷெனிடர் (Elizabeth Schneider) கொரானா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நம்பிக்கை தருவதற்காக தமது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது அனுபவத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அதில், பார்ட்டி ஒன்றுக்கு சென்ற அவருக்கு 5 நாட்கள் கழித்து முதலில் தலைவலியும் அதைத் தொடர்ந்து காய்ச்சலும், உடல் வேதனையும் ஏற்பட்டது. காய்ச்சல் 103 டிகிரியாக அதிகரித்ததால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது.


இதையடுத்து, உடனே அருகிலிருந்த மருந்துக் கடையில் உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை வாங்கி எடுத்துக் கொண்டதில் காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. அப்போது கொரானா குறித்த தகவல்கள் புயலாய் பரவ ஆரம்பித்தன. தம்முடன் பார்ட்டியில் பங்கேற்ற சிலருக்கு கொரனா தொற்று இருப்பதாக முகநூலில் படித்ததை அடுத்து ரத்த பரிசோதனை செய்து கொண்ட அவருக்கும் தொற்று உறுதியானது.



ஜலதோஷம், இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமலும் கொரனா தாக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அவரை குறைந்தது 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு சியாட்டில் மருத்துவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். நல்ல ஓய்வு, நிறைய தண்ணீர் குடிப்பது என ஒரு வாரத்தை செலவிட்ட பிறகு  இயல்பான நிலைமைக்கு திரும்பியதாக அவர் கூறியிருக்கிறார்.


தனது இடுகையின் முடிவில், சியாட்டலை தளமாகக் கொண்ட பெண், COVID-19 இன் ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தால் தங்களை சோதித்துப் பார்க்கும்படி மக்களை வலியுறுத்தினார். மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த பீதியும், தவறான தகவல்களுக்கு மத்தியில் இவரது இந்த பதிவு சற்று மக்களை நிம்மையாக மூச்சு விட வைத்துள்ளது.