நடிகர் சிவகார்த்திகேயனை எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிடுவதற்கான காரணம் தெரியுமா?
திரைப்படத் தயாரிப்பாளர் சீனு ராமசாமி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். அவர் சிவகார்த்திகேயனையும், தோனியையும் ஒப்பிட்டு வெளியிட்ட டிவிட்டர் வைரலாகிறது....
புதுடெல்லி: திரைப்படத் தயாரிப்பாளர் சீனு ராமசாமி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். அவர் சிவகார்த்திகேயனையும், தோனியையும் ஒப்பிட்டு வெளியிட்ட டிவிட்டர் வைரலாகிறது.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் உணர்ச்சிவசப்படுவதையும், கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்ததையும் காண முடிந்தது.
தோனி ஓய்வு தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் "எங்களை அதிகபட்சம் ஊக்குவித்ததற்கும், பொழுதுபோக்கை சிறப்பாகக் கொடுத்ததற்கும் நன்றி. நீங்கள் என்றுமே ஒரு அற்புதமான தலைவர் தோனி. எங்களை ஆச்சரியப்படுத்த உங்களிடம் வெவ்வேறு திட்டங்கள் இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். உங்கள் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகக் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்திருந்தார்.
சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு இயக்குநர் சீனு ராமாசாமி "சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையில் நட்சத்திரமாக ஆன நீங்களும் அதிக ஊக்கமும், பொழுதுபோக்கும் தந்தவர் சிவகார்த்திகேயன். தோனியைப் போலவே உங்கள் களத்தில் பெரும்பாலும் புதியவர்களுக்கும், நண்பர்களுக்கும் வாய்ப்பு தந்தீர்கள். அடிமட்டத்திலிருந்து வந்த நீங்கள் இருவரும் வெற்றி பெற்றீர்கள்" என்று தெரிவித்தார். இந்த ட்வீட் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
விஜய் சேதுபதியின் திரையுலக வழிகாட்டியான சீனு ராமசாமி, தென்மேற்கு பருவகாற்று, கூடல் நகர் என பல வெற்றிகரமான திரைப்படங்களை வழங்கியவர்.சீனு ராமசாமியின் இந்த ட்வீட்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவகார்த்திகேயன், "சார், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இது எனக்கு ஊக்கம் தருகிறது. இன்னும் கடினமாக உழைப்பேன், என்னை இன்னும் சிறந்த மனிதனாக, நடிகனாக மேம்படுத்திக் கொள்வேன். உங்களுடைய வார்த்தைகள் எனக்கு மிக முக்கியமானவை” என்று தெரிவித்துள்ளார்.
Read Also | கணவர் MS Dhoniயின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்கு சாக்ஷியின் எதிர்வினை...