திருநங்கைகள் குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் செய்த பதிவுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை கஸ்தூரி, அவ்வப்போது கருத்துகள் சமூக வலைதளத்தில் மூலமாக தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது டிவிட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டிருந்தார். அதில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, ‘கோர்ட்ல ஸ்பிளிட் வெர்டிக்டாமே? அப்போ பதினெட்டை ரெண்டா பிரிச்சா…’ என திருநங்கை வேடமணிந்த இருவரின் படத்தை பதிவு செய்திருந்தார்.


இதற்கு திருநங்கைகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி மதுரையில் திருநங்கைகள் புகார் கொடுத்தனர்.


அதுமட்டுமின்றி அவரது இல்லம் எதிரே சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகளை இழிவு செய்த தனது பதிவை நீக்கினார் கஸ்தூரி.


மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி தனது டிவிற்றில் பதிவிட்டார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டு உள்ளது. 


டிவிட் பதிவில்:-


‘Stand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.


 



 


இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல  என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்.


 



 


என கூறியிருக்கிறார் கஸ்தூரி.


இன்ஸ்டாகிராம் பதிவில்:-