வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து யாருக்கெல்லாம் விலக்கு; முழு விபரம் உள்ளே..!!
புதிய வருமான வரி தாக்கலுக்கான புதிய தளத்தில், தொழில் நுட்ப கோளாறு பிரச்சனை காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-22 நிதியாண்டில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து (ITR) விலக்கு அளிக்கப்படுவார்கள். மத்திய நேரடி வரிகள் வாரியம், இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்பு படிவங்களை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மீதான வரி விதிக்கப்பட்டு, அந்த தொகை வங்கிகள் மூலம் வசூலிக்கப்படும்.
2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் இதனை அறிவித்தார். "நம் நாட்டின் சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டில், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, வருமான வரி தாக்கலில் விலக்கு அளிக்கப்படும்," என்று அவர் அறிவித்தார்.
ALSO READ | Income Tax Refund: வருமான வரி ரீபண்ட் நிலையை அறிந்து கொள்வது எப்படி..!!
கோவிட் -19 தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு, 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், மூலம் உருவாக்கப்பட்ட புதிய வருமான வரி தாக்கலுக்கான புதிய தளத்தில், தொழில் நுட்ப கோளாறு பிரச்சனை காரணமாகவும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய போர்டலில் உள்ள தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்ய இன்போஸிஸ் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை அரசு கால அவகாசம் அளித்துள்ளது.
ALS READ | Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!
கீழ்கண்ட நிபந்தனைகளின் கீழ், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு பெறுவார்கள்.
- முந்தைய ஆண்டு இந்தியாவில் இருந்த, 75 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
- ஓய்வூதியம், தவிர வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லாத மூத்த குடிமக்கள். இருப்பினும், அவர் அல்லது அவள் தனது ஓய்வூதிய வருமானத்திலிருந்து வட்டி பெறுபவராக இருக்கலாம்.
- 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்துள்ள வங்கிகளிடம் தகவல் அளிக்க வேண்டும்.
75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதே வங்கியில் வட்டி வருமானம் கிடைத்தால் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ALSO READ | வரி செலுத்துவோருக்கு அதிர்ச்சி தகவல்! IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.