Shani peyarchi 2022: சனிபகவான் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அந்த மாற்றம் சிலருக்கு பெரிய அளவிலான நன்மைகளையும், சிலருக்கு அதிக பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் அதிகமாகும், சிலருக்கு இதன் தாக்கம் குறையும். 2021ம் ஆண்டு சனி பகவான் தனது ராசியை மாற்றவில்லை. ஆனால் 2022ல் அவர் தனது ராசியை மாற்றப்போகிறார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். 


ஜோதிடத்தின் படி, சனி பகவானின் இட மாற்றம் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. சனி எந்த ராசியில் (Zodiac Signs) பிரவேசிக்கப்போகிறார், எந்த ராசிக்காரர்களுக்கு சனியின் கோபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


சனியின் கோவப்பார்வையிலிருந்து இவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்


சனீஷ்வரர் ஏப்ரல் 29, 2022 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் சனி நுழைந்தவுடன் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவார்கள். 


மறுபுறம், மிதுனம் மற்றும் துலாம் (Libra) ராசிக்காரர்கள் சனியின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். இந்த மூன்று ராசிகளுக்கும் 2022 சிறப்பானதாக இருக்கும். சனிபகவானின் கோபத்தில் இருந்து விடுபட்டவுடன், தடைபட்ட வேலைகள் வேகமாக முடிவடையும். பணம் சம்பாதிக்க பல வழிகள் திறக்கும். இத்தனை நாட்களாக உறங்கிக்கொண்டிருந அதிர்ஷ்டம் விழித்துக்கொள்ளும். பணம் ஈட்டுவதற்கான வலுவான வாய்ப்புகள் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராசிக்கார்ரகளின் டென்ஷன் குறையும்.


ALSO READ | ராகு பெயர்ச்சி 2022: ராகுவின் மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரர்கள் வெற்றி மழையில் நனைவார்கள் 


இந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள்: 


தனுசு, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் பிடியிலிருந்து விடுதலை கிடைக்கும் அதே நேரம், சில ராசிகள் சனி பகவானின் பிடியில் சிக்குவார்கள். இதில் மீனம், கடகம் (Cancer) மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியால் அதிக பாதிப்புகள் ஏற்படும். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் வரும் காலம் மிகவும் வேதனையாக இருக்கும். எனினும், ஜாதகத்தில் சனிபகவான் வலுவாக உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்திலும் நன்மைகள் நடக்கும் . 


சனி பகவானின் தாக்கத்திற்கு நிவாரணம் என்ன?


ஜோதிட சாஸ்திரப்படி சனி தசை நடக்கும்போது, நாம் செய்யும் அனைத்து பணிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். மது, அசைவம் சாப்பிடக் கூடாது. குறிப்பாக சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் இவற்றை தொடவே கூடாது. சனி தசை நடக்கும்போது சில வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தை சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படலாம். முடிந்தவரை யாருடனும் சண்டையை இழுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. 


ALSO READ | நேர்மையான இந்த 5 ராசிக்காரர்களை மிஸ் செய்தா நஷ்டம் உங்களுக்குத் தான்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR