ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்கிறார். இதில், அவர் சில மாதங்களுக்கு பின்னோக்கியும் நகர்கிறார். தற்போது சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 29 ஆம் தேதி இவரது ராசி மாற்றம் ஏற்பட்டது. இந்த பெயர்ச்சி ஏற்கனவே பலரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் சனி பகவானின் பெயர்ச்சி வாழ்க்கையையே மாற்றும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி, சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது. சனியின் வக்ர இயக்கம் ஜூன் 05 ஆம் தேதி 03:16க்கு தொடங்கும். இதற்குப் பிறகு அக்டோபர் 23-ஆம் தேதி வரை சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இந்த வழியில், சனி மொத்தம் 141 நாட்களுக்கு வக்ர நிலையில் இருக்கும். 


மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்


ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனியின் வக்ர பெயர்ச்சி 4 ராசிக்காரர்களை சிக்கலில் தள்ளும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேஷம்- சனி வக்ரம் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதாரதிதில் நெருக்கடிகளை தரலாம். ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், உங்கள் நலன் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற்றுங்கள். திருமண வாழ்க்கையிலும் வக்ர சனியின் தாக்கம் இருக்கும். வீட்டில் தேவையில்லா மனக்கசப்பு அல்லது தகராறு உண்டாக்கலாம். 


கடகம் - கடக ராசிக்காரர்கள் சில விபத்துகளால் பாதிக்கப்படலாம். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடக ராசிக்காரர்களுக்கு, இந்த 141 நாட்கள் பொருளாதார ரீதியாகவும் வேதனை தரும். இந்த காலகட்டத்தில் சில முக்கியமான வேலைகளை செய்ய நினைத்தால், அதை சிறிது தள்ளிப் போடுவது நல்லது. 


மகரம் - மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். பிற்போக்கு சனி உங்கள் தொழிலை மோசமாக பாதிக்கும். தொழிலில் புதிய கடின சவால்கள் வரலாம். உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். 


கும்பம்- சனி உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். உங்கள் பேச்சு மற்றும் நடத்தையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பண விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.


மறுபுறம் சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு, ரிஷபம் மற்றும் கன்னி ராசியினருக்கு நன்மை பயக்கும்.


தனுசு - தனுசு ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் நல்ல வாய்ப்பை பெறலாம். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், உங்கள் கடின உழைப்பின் பலன் இந்த நேரத்தில் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்ற முன்னோக்கி செல்லவராகள். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கலாம்.


கன்னி - இந்த ராசிக்காரர்களுக்கு சிறு முயற்சிகள் உதவிகரமாக இருக்கும். இதன் போது மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR