ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. கிரகங்களின் மாற்றம் அல்லது பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை காணலாம். கிரகங்களின் ராசி மாற்றம் நல்ல பலன்களையும் தீய பலன்களையும் ஏற்படுத்தும். வரும் ஜூன் மாதம் 5 முக்கிய கிரகங்கள் ராசி மாறப் போகின்றன.
அதன்படி ஜூன் இரண்டாம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார். அப்போது செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார். இதற்குப் பிறகு, ஜூன் 3 ஆம் தேதி புதன் கிரகம் பின்னோக்கி நகர்வார். ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்கிரமாவார். எந்த ஒரு கிரகமும் வக்கிரமாகும் போது, அது நேராக நகராமல் பின்னோக்கி செல்லும். அதேபோல் ஜூன் 5 முதல், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் பின்னோக்கி நகர்வார். பின்னர் ஜூன் 15 ஆம் தேதி, கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது. இதுதவிர ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் அதாவது குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். மற்றும் சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். இந்த ஐந்து கிரகப் பெயர்ச்சிகளும் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். எனவே ஜூன் 2022-ன் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த ராசிக்காரர்களின் தலைவிதி ஜூன் 2022 இல் பிரகாசிக்கும்
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஜூன் 2022 மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள். புதிய வேலையில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகளும் இந்த மாதம் அதிக லாபம் அடைவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை
சிம்மம்: ஜூன் 2022ல் நடக்கும் கிரகப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கும் நல்ல காலத்தைக் கொண்டுவரும். மரியாதை அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆளுமையின் கவர்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய காரியம் நடக்கலாம். போட்டியில் வெற்றி பெறலாம். மொத்தத்தில், இந்த மாதம் எல்லா வகையிலும் செழிப்பாக இருக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் 2022 ஜூன் மாதம் நிதி ரீதியாக நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இந்த பண ஆதாயம் உங்கள் பல விருப்பங்களை நிறைவேற்றும். எதிர்காலத்திற்காகவும் சேமிக்க முடியும். வர்த்தகர்கள் புதிய ஆர்டரைப் பெறலாம், இது நிறைய லாபத்தைத் தரும். எதிர்காலத்திற்காக ஒரு பெரிய ஒப்பந்தம் இருக்கலாம். நிலுவையில் உள்ள பழைய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR