மொபைல் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: வரும் நாட்களில் கட்டணங்கள் அதிகரிக்கலாம்
வரவிருக்கும் காலங்களில் மலிவு விலை தரவு என்பது கிடைக்காமல் போகலாம். நாம் தொலைபேசியில் பேசுவதற்கும் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம்.
Airtel Tariff Hike: மொபைல் போன் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!! உங்கள் மொபைல் போன் பில் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாரதி ஏர்டெல்லின் தலைவர் சுனில் பார்தி மித்தல், நிறுவனத்திற்கு பெரும் கடன் இருப்பதாகவும், அதன் காரணமாக நிறுவனம் கட்டணத்தை அதிகரிப்பது பற்றி யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆகையால், வரவிருக்கும் காலங்களில் மலிவு விலை தரவு என்பது கிடைக்காமல் போகலாம். நாம் தொலைபேசியில் பேசுவதற்கும் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம்.
ஏர்டெல் 21,000 கோடி ரைட்ஸ் இஷ்யூவை கொண்டுவருகிறது
சுனில் பார்தி மித்தலின் அறிக்கைக்கு ஒரு நாள் முன்பு, ஏர்டெல் (Airtel) நிறுவனம் தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு ரைட்ஸ் இஷ்யூவை வழங்கி அதன் மூலம் ரூ. 21,000 கோடியை திரட்டுவதாக அறிவித்தது. இதன் மூலம் நாட்டில் 5 ஜி அறிமுகத்துக்கு தயார்படுத்தி, இந்த துறையில் தனது இருப்புநிலைகளை வலுப்படுத்த நிறுவனம் ஆயத்தமாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மீது பெரும் கடன்: சுனில் மித்தல்
முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது, சுனில் பார்தி மித்தல் நிறுவனம் அதிக அளவிலான கடனைக் கொண்டுள்ளது என்று கூறினார். இதன் காரணமாக நிறுவனம் மட்டுமல்லாமல் நிறுவனத்தின் முதலீட்டாளர்களும் (Investors) சிக்கலில் உள்ளனர். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீதான வரி மற்றும் சுமை குறைக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: தினசரி 4GB டேட்டாவை வழங்கும் VI; ரூபாய் 249க்கு அதிரடி ரீசார்ஜ் பிளான்
தொழில் மீதான வரிச்சுமை: சுனில் மித்தல்
முதலீட்டாளர்கள் சந்திப்பில், சுனில் மித்தல், தொடர்ந்து முதலீடு செய்வதற்கு இடையூறாக இருக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு தொழில் துறை அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்தார். தொழில்துறையின் மீதான வரிச்சுமை இன்னும் உள்ளது என்று அவர் கூறினார். ஒவ்வொரு ரூ .100 வருவாயிலும் அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ரூ. 35 சென்று விடுகிறது என்று அவர் கூறினார்.
5 ஜி ஒரு நாள் யதார்த்தமாகும்: சுனில் மித்தல்
தொலைத்தொடர்புத் துறையின் ARPU கள் (பயனருக்கு சராசரி வருவாய்) இந்த நிதியாண்டு இறுதிக்குள் ரூ .200 ஆக இருக்கும், அதன் பிறகு அது ரூ .300 ஐ எட்டும் என்று சுனில் மித்தல் மதிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில், 5 ஜி (5G) ஒரு யதார்த்தமாக மாறியிருக்கும் என்றும் அவர் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஏலம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ALSO READ:Jio, Airtel பயனர்களுக்கு பம்பர் செய்தி: ரூ.450-க்குள் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR