வரும் நாட்களில் ஏதேனும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் திட்டம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அதை விரைவாக செய்ய வேண்டும். இந்த அனைத்து பொருட்களின் விலையும் மார்ச் மாதத்தில் அதிகரிக்கப் போகிறது. மூலப்பொருள் மற்றும் சரக்கு கட்டண உயர்வின் தாக்கம் வாடிக்கையாளர்கள் மீது ஏற்படப்போகிறது. சமீபகாலமாக ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. இது தவிர சலவை இயந்திரங்களின் (Washing Machine) விலை மார்ச் மாதத்திற்குள் 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல நிறுவனங்கள் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தியுள்ளன


பானிசோனிக், எல்.ஜி, ஹயர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்கனவே பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. அதே நேரத்தில் Sony, Hitachi, Godrej Appliances ஆகியவை இந்த காலாண்டு இறுதிக்குள் விலையை அதிகரிக்க முடிவு செய்யக்கூடும். நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (CEAMA) படி, தொழில்துறை நிறுவனங்கள் ஜனவரி முதல் மார்ச் வரை விலைகளை 5-7 சதவீதம் அதிகரிக்கும்.


பானசோனிக் ஏற்கனவே விலையை 8 சதவீதம் உயர்த்தியுள்ளது


பானாசோனிக் ஏற்கனவே அதன் ஏசிகளின் (AC) விலையை எட்டு சதவீதம் வரை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொருட்களின் விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலியில் மீண்டும் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக ஏசி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பானாசோனிக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  


ALSO READ | ரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை சேர்ப்பது எப்படி 


மூலப்பொருள் விலை உயர்வு: கவலைக்குரிய விஷயம்


தென் கொரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. மூலப்பொருள் மற்றும் தளவாடங்களின் விலை அதிகரிப்பு கவலையளிக்கிறது என்று எல்.ஜி LG தெரிவித்துள்ளது. எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஏர் கண்டிஷனர் பிசினஸ் துணைத் தலைவர் தீபக் பன்சால் கூறுகையில், "புதுமையான நடவடிக்கைகள் மூலம் செலவுச் சுமையை சமாளிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம், ஆனால் வணிகத்தைத் தக்கவைக்க விலை உயர்வு அவசியம்." என்று கூறியுள்ளார்.


ஹிட்டாச்சியும் விலைகளை 10 சதவீதம் அதிகரிக்கும்


விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ள ஜான்சன் கட்டுப்பாட்டில் உள்ள ஹிட்டாச்சி ஏர் கண்டிஷனிங் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் குர்மீத் சிங், மூலப்பொருட்கள், வரி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன என்றார். அத்தகைய சூழ்நிலையில், நிறுவனம், ஏப்ரல் மாதத்திற்குள் 10 சதவீதம் வரை விலையை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்திற்குள் படிப்படியாக விலையை எட்டு முதல் 10 சதவீதம் வரை உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


முன்னர் விலை உயர்வு ஒத்திவைக்கப்பட்டது


இந்த விலை உயர்வு முன்னரே நடக்கவேண்டி இருந்தது என்றும், பண்டிகை காலம் காரணமாக இது ஒத்தி வைக்கப்பட்டது என்றும் CEAMA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தாங்கள் எதிர்கொள்ளும் விலை உயர்வின் (Price Hike) தாக்கத்தை இப்போது தொழில்துறையினர் வாடிக்கையாளர்கள் பக்கம் திருப்புவதைத் தவிர வேறு வழியுல்லை என்றும் நுகர்வு சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 


ALSO READ | Sukanya Samriddhi Yojana: தினம் ₹416 முதலீட்டில் ₹65 லட்சம் அள்ளலாம்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR