Edible Oil Price: பண்டிகை காலத்தில் பளிச் செய்தி, சமையல் எண்ணெய் விலை குறைந்தது

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அதானி வில்மர், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் மொத்த விலையில் லிட்டருக்கு 4-7 ரூபாய் வரை குறைத்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2021, 01:17 PM IST
Edible Oil Price: பண்டிகை காலத்தில் பளிச் செய்தி, சமையல் எண்ணெய் விலை குறைந்தது title=

Edible Oil Price Down: தீபாவளியை முன்னிட்டு சாமானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி வந்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அதானி வில்மர், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் மொத்த விலையில் லிட்டருக்கு 4-7 ரூபாய் வரை குறைத்துள்ளன.

இந்த நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை குறைத்துள்ளன

மற்ற நிறுவனங்களும் விரைவில் அத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்று தொழில்துறை அமைப்பான சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் (SEA) தெரிவித்துள்ளது. ஜெமினி எடிபிள்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹைதராபாத்), மோடி நேச்சுரல்ஸ் (டெல்லி), கோகுல் ரீஃபாயில்ஸ் அண்ட் சால்வென்ட்ஸ் லிமிடெட் (சித்தாபூர்), விஜய் சோல்வெக்ஸ் லிமிடெட் (அல்வார்) கோகுல் அக்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் என்கே புரோட்டீன்ஸ் பிரைவேட் லிமிடெட் (அகமதாபாத்), ஆகியவை சமையல் எண்ணெய்களின் (Oil) மொத்த விலையை குறைத்துள்ளன.

ALSO READ: உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன 

பண்டிகை காலத்தில் விலை குறைக்கப்பட்டது

பண்டிகைக் காலங்களில் அதிக விலையில் (Price Rise) இருந்து நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என SEA நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் மொத்த விலையை குறைத்துள்ளன. SEA தலைவர் அதுல் சதுர்வேதி கூறுகையில், “தொழில்துறையின் பதில் மிகவும் ஊக்கமளிக்கிறது. இதற்கு முன்பே மொத்த விற்பனையாளர்கள் மொத்த விலையில் டன்னுக்கு ரூ.4,000-7,000 (லிட்டருக்கு ரூ.4-7) குறைத்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையைக் குறைக்கப் போகின்றன.” என்றார்.

எண்ணெய் விலை மேலும் குறையலாம்

இந்த ஆண்டு உள்நாட்டு சோயாபீன் மற்றும் நிலக்கடலை பயிர்கள் ஏற்றம் கண்டு வருவதாகவும், அதே நேரத்தில் கடுகு விதைப்பு ஆரம்ப அறிக்கைகள் மிகவும் நன்றாக இருப்பதாகவும், ராப்சீட் மகசூல் எதிர்பார்க்கப்படுவதாகவும் சதுர்வேதி கூறினார்.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil) மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, உலக சமையல் எண்ணெய் விநியோகத்தின் நிலைமையும் மேம்பட்டு வருகிறது. இதன் காரணமாக சர்வதேச விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: பண்டிகை காலத்தில் இனிப்பான செய்தி: சமையல் எண்ணெய் விலை குறைந்தது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News