ரயில் நிலைய உணவு: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்களா? பயணிக்கும்போது  வழக்கமாக ரயில் அல்லது ரயில் நிலையத்திலேயே விற்கப்படும் உணவை சாப்பிடுகிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆம் என்றால், கவனமாக இருங்கள். ஆம், கோடிக்கணக்கான ரயில்வே பயணிகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது பணவீக்கத்தின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இறுதியாகும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை உணவுப் பொருட்களின் கணக்கெடுப்பு ரயில்வேயால் மேற்கொள்ளப்படுகிறது. இதன் பிறகு, நிலையம் / நடைமேடை அல்லது ரயிலில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாதனை அளவில் சில்லறை பணவீக்கம் 


தற்போது வடக்கு ரயில்வே மூலம் சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். கடந்த சில மாதங்களாக, சில்லரை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் இருக்கும் நிலையில், ​​உணவு மற்றும் பானங்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது. கணக்கெடுப்பின் அடிப்படையில் வரும் அறிக்கையை கருத்தில் கொண்டு புதிய கட்டண பட்டியல் வெளியிடப்படும்.


ரயில்வே வாரியம் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடும் 


இந்தப் பணியை உரிய நேரத்தில் மேற்கொள்ளும் வகையில், வடக்கு ரயில்வேயின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு அறிக்கைகள் விரைவில் கோரப்பட்டுள்ளன. உத்தேச புதிய கட்டணங்களின் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே வாரியத்திற்கு அதில் எந்த மாற்றத்தையும் செய்ய உரிமை உள்ளது. பின்னர், ரயில்வே வாரியத்திலிருந்தே இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அனைத்து பிரிவுகளுக்கு அறிவிப்பு வழங்கப்படும்.


மேலும் படிக்க | Railway Recruitment: இந்தியன் இரயில்வேயில் 2521 பேருக்கு வேலைவாய்ப்பு 


10 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலையை திருத்தும் விதி


ரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. முன்னதாக 2012 ஆம் ஆண்டு, சந்தையை மதிப்பீடு செய்த பிறகு, டெல்லி டிவிஷன் பிளாட்பாரத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு ரயில்வே நிர்வாகம் அனைத்து கோட்டங்களிலும் முன்மொழியப்பட்ட கட்டணத்தின் அறிக்கையை கேட்டுள்ளது.


ஆய்வின் அடிப்படையில் அறிக்கை முடிவு செய்யப்படுகிறது


இதுகுறித்து வடக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ தீபக் குமார் 'ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சந்தையை ஆய்வு செய்த பிறகே, ரயில் நிலையத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சந்தை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன் அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்படும். விலை குறித்து வாரியம் இறுதி முடிவு எடுக்கும்.' என்று கூறினார்.


கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த காரணத்திற்காக, அதன் தாக்கம் வரும் காலங்களில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் விற்கப்படும் பொருட்களில் காணப்படும். இந்த கணக்கெடுப்புக்குப் பிறகு, பயணிகளின் பாரம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | UPI பாஸ்வேர்டை PAYTM வழியாக மாற்றுவது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR