நியூடெல்லி: மேற்கு மத்திய இரயில்வே மொத்தம் 2521 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17 ஆகும். தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் wcr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்கள்
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10ஆம் வகுப்புத் தேர்வு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT/SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | மாதம் ரூ.92,000 சம்பளத்தில் ESIC-ல் வேலைவாய்ப்பு!
Railway Recruitment 2022: தேர்வு செயல்முறை
இந்த அறிவிக்கையின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், தேர்வு செயல்முறை மற்றும் பணி நியமனம் நடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான (10+2 தேர்வு முறையின் கீழ்) மற்றும் ஐடிஐ தகுதியின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பிப்பவர்கள், தேர்வு செய்யும் வர்த்தகம்/பிரிவு/அலகு ஆகியவற்றின் அடிப்படையில், தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் அதாவது. வர்த்தக வாரியாக, பிரிவு/அலகு வாரியாக & சமூக வாரியாக பட்டியல்கள் தயாரிக்கப்படும்.
மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பயிற்சியாளராக பணி புரிவார்கள்., மேலும் தற்போதுள்ள விதிகளின்படி பயிற்சியின் போது அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் படிக்க | 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை
மேற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிப்பதற்கான வழிமுறை
படி 1: WCR இன் இணையதளத்தைப் பார்வையிடவும் - wcr.indianrailways.gov.in
படி 2: ஆட்சேர்ப்பு-ரயில்வே ஆட்சேர்ப்பு செல்-2022-23க்கான, Engagement of Act Apprentice என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்
படி 4: கேட்கப்படும் விவரங்களை உள்ளிடவும்.
படி 5: விண்ணப்பத்தை சமர்பித்த பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
மேலும் படிக்க | SSC Recruitment: 24,369 கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ