2022-23 புதிய நிதியாண்டின் தொடக்கத்தில், ஜெட் எரிபொருள் அல்லது ஏர் டர்பைன்  எரிபொருள் (ATF) விலை அதிகரித்துள்ளது. ATF விலை இந்த ஆண்டு 7வது முறையாக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, ஏப்ரல் முதல் நாளில், விமான எரிபொருள் அல்லது ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலை அதிகரித்துள்ளது. விமானத்தில் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இதை அடுத்து, விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ.1,12,924.83 என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.


ஓராண்டில் 7வது முறையாக விலை அதிகரித்துள்ளது


ATF விலை இந்த ஆண்டு 7வது முறையாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில், அதன் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது கிலோலிட்டருக்கு ரூ.2,258.54 என்ற அளவில் அதிகரித்துள்ள நிலையில், ஏடிஎஃப் விலை தற்போது கிலோ லிட்டருக்கு ரூ.1,12,924.83 என்ற அளவை எட்டியுள்ளது.


மேலும் படிக்க |மொபைல் ரீசார்ஜ்: 28 நாள் வேலிட்டிட்டி குறித்து TRAI வழங்கிய முக்கிய உத்தரவு


1 மற்றும் 16ம் தேதிகளில் விலை மாற்றம்


சராசரி சர்வதேச விலையின் அடிப்படையில், விமான எரிபொருளின் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் மாற்றியமைக்கப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ATF விலைகள் அதிகரித்துள்ளன. ஜனவரி 1ம் தேதியில் இருந்து 7  முறை எரிபொருள்  விலைஉயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ATF விலைகள் 38,902.92 கிலோ லிட்டர் அல்லது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.



பெட்ரோல், டீசல் விலை 


இந்நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டன. இன்று அதாவது ஏப்ரல் 1ம் தேதி கச்சா எண்ணெய் விலையில் உயர்வு இல்லை. 


தலைநகர் டெல்லி உட்பட நான்கு பெருநகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை சீராக உள்ளது. நாடு முழுவதும் எண்ணெய் விலை உயரவில்லை. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிந்ததே. 


எண்ணெய் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள், எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையையும்  ரூ.250  என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளன. ஆனால், இந்த விலை உயர்வு சமையல் எரிவாயு சிலிண்டருக்கானது அல்ல. கம்ர்ஷியல் எரிவாயு சிலிண்டர்கள் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR