India's First Millionaire: இந்த நாட்களில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார் போன்ற இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர்களைப் பற்றி நிறைய விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டீருப்பீர்கள். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் ஒரு தொழிலதிபர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முதல் கோடீஸ்வரரான இவர், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தினார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர் ஒரு கஞ்சன், தன்னைச் சுற்றியே அசுத்தமான பொருள்களை வைத்துக்கொண்டு வாழ்ந்தார். இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்ற பட்டத்தை ஐதராபாத்தை சேர்ந்த நிஜாம் மிர் உஸ்மான் அலிகான் தான் பெற்றார். 


நிஜாம் அலி இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் ஆவார், ஏனெனில் அவரது அபரிமிதமான சொத்துக்கள் பற்றிய நல்ல பதிவுகள் அதை விவரிக்கின்றன. நிஜாம் அலியை விட அதிக பணம் வைத்திருந்த பல ஆட்சியாளர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களின் செல்வத்தைப் பற்றி உறுதியான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை, அதனால்தான் நிஜாம் அலியை இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்று சொல்லப்படுகிறார். 


டைம் இதழ், அதன் 1937 பிப்ரவரி 22 அன்று பிரசூரம் செய்த இதழில், ஹைதராபாத் நிஜாம் அலி "உலகின் பணக்காரர்" என்று பெயரிடப்பட்டார். நிஜாம் உஸ்மான் அலி அபரிமிதமான செல்வத்தின் உரிமையாளராக இருந்தார் மற்றும் அறிக்கைகளின்படி, நிஜாம் அலியின் ரூ. 3 பில்லியனுக்கும் அதிகமான பணம் இன்னும் இங்கிலாந்தில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்!


ஆனால் நிஜாம் அலி ஒரு கஞ்சன் மற்றும் அவர் மிகவும் எளிமையான ஆடைகளை அணிந்திருந்தார். அறிக்கைகளின்படி, நிஜாம் மிர் உஸ்மான் அலியின் படுக்கையறை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்பட்டது. அவர் தனது விருந்தினர்களுக்கு உணவளிக்க பணத்தை செலவழிக்க விரும்பவில்லை, பெரும் பணம் இருந்தபோதிலும், நிஜாம் அலி தனது விருந்தினர்களை ஒரு பிஸ்கட் மற்றும் ஒரு கோப்பை தேநீருடன் மட்டுமே கொடுத்து வரவேற்பு தருவார்.


1911ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாம் ஆனார் ஒஸ்மான் அலி கான். ஆகஸ்ட் 15, 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதும், அவர் அதுவரை இந்தப் பதவியில் இருந்தார். நிஜாமின் மொத்த நிகர மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது ரூ.17.47 லட்சம் கோடி.


நிஜாம் அலி தனது சொந்த நாணயத்தை வைத்திருந்தார். மேலும் அவர் ஒரு தனியார் விமான நிறுவனத்தையும் வைத்திருந்தார். அவரிடம் 100 மில்லியன் பவுன் தங்கம், 400 மில்லியன் பவுன் நகைகள் இருந்தன. நிஜாம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமணத்தில் 300 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸை பரிசாக வழங்கினார். நிஜாம் அலி கோல்கொண்டா வைரச் சுரங்கங்களின் உரிமையாளராக இருந்தார், மேலும் அவை அவருக்கு மிகப்பெரிய வருமான ஆதாரமாக இருந்தன.


அந்த சகாப்தத்தில், நிஜாம் அலி எல்லா காலத்திலும் உலகின் பணக்காரர்களில் ஒருவராக பரவலாக கருதப்பட்டார். 1940களின் முற்பகுதியில் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 1,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023இல் சுமார் 29,57,70 கோடியாக மாறியது. சில்வர் கோஸ்ட் த்ரோன் கார் உட்பட 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு நிஜாம் உஸ்மான் அலி உரிமையாளராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோ-இ-நூர் வைரம், ஹோப் வைரம், தர்யா-இ நூர் வைரம், நூர்-உல்-ஐன் வைரம், பிரின்சி வைரம், ரீஜண்ட் வைரம் மற்றும் விட்டல்ஸ்பாக் வைரம் போன்ற பல விலையுயர்ந்த வைரங்களையும் அவர் வைத்திருந்தார்.


மேலும் படிக்க | SBI vs Post Office: FD-இல் சிறந்தது எது...? - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ