அக்டோபரில் அதிர்ச்சி: அதிகரிக்கவுள்ளன CNG, PNG விலைகள், விவரம் இதோ
எரிவாயு விலை உயர்வு ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற தனியார் நிறுவனங்களின் விளிம்புகளையும் அதிகரிக்க உதவும்.
புதுடெல்லி: அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மீண்டும், அடுத்த மாதம், சிஎன்ஜி மற்றும் சமையல் எரிவாயு (PNG) விலை அதிகரிக்கக்கூடும். ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபரில், அரசாங்கம் எரிவாயு விலையை சுமார் 10-11 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. விலைகளில் எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பணவீக்த்தால் பெரிய தாக்கம்
எரிவாயு விலை உயர்வு காரணமாக நமது பயணங்கள் மற்றும் சமையலுக்காகும் செலவும் அதிகரிக்கவுள்ளது. அதாவது, மீண்டும் பொதுமக்களுக்கு இரட்டை தாக்கம் ஏற்படப்போகின்றது. புதிய வீட்டு எரிவாயு கொள்கை 2014 ன் (Domestic Gas Policy, 2014) கீழ், இயற்கை எரிவாயுவின் விலை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, இப்போது அடுத்த ஆய்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். அக்டோபருக்குப் பிறகு, எரிவாயு விலை ஏப்ரல் 2022 இல் நிர்ணயிக்கப்படும்.
எரிவாயு விலை எவ்வளவு அதிகரிக்கும்
சந்தை தரகர்களின் கூற்றுப்படி, அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரையிலான காலத்திற்கு APM அல்லது அட்மினிஸ்டர்ட் ரேட் ஒரு மில்லியன் ப்ரிட்டிஷ் தர்மல் யூனிட்டிற்கு (mmBtu) 3.15 அமெரிக்க டாலராக மாறும். இது தற்போது 1.79 டாலராக உள்ளது.
ALSO READ:CNG விலை உயர்வு - ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd) KG-D6 மற்றும் BP Plc போன்ற ஆழமான நீர் வயல்களின் எரிவாயு விகிதங்கள் அடுத்த மாதம் ஒரு mmBtu க்கு 7.4 டாலராக அதிகரிக்கும்.
விலைகள் 10-11 சதவீதம் அதிகரிக்கலாம்
ஐசிஐசிஐ செக்யூரிடீசின் அறிக்கையின்படி, நகர எரிவாயு விநியோகஸ்தர்கள் (CGD) அக்டோபரில் விலைகளை 10-11 சதவிகிதம் உயர்த்தக்கூடும். சர்வதேச சந்தைகளின் போக்கின் படி, APM கேசின் விலை ஏப்ரல் 2022 முதல் செப்டம்பர் 2022 வரை ஒரு mmBtu-க்கு 5.93 அமெரிக்க டாலராகவும், அக்டோபர் 2022 முதல் மார்ச் 2023 வரை mmBtu-க்கு 7.65 அமெரிக்க டாலராகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகள் 49 முதல் 53 சதவீதம் வரை அதிகரிக்கும்
சிஎன்ஜி (CNG) மற்றும் பைப்ட் இயற்கை எரிவாயு (PNG) விலைகள் அக்டோபர் 2021 இல் 11-12 சதவிகிதமும் 2022 ஏப்ரல் மாதத்தில் 22-23 சதவிகிதம் அதிகரிக்கும். APM எரிவாயு விலை FY22 இன் முதல் பாதியில் ஒரு mmBtu க்கு 1.79 டாலர் என தொடங்கி, FY23 இன் இரண்டாம் பாதியில் ஒரு mmBtu க்கு 7.65 டாலர் வரை அதிகரிக்கலாம். அதாவது MGL மற்றும் IGL அக்டோபர் 2021 மற்றும் அக்டோபர் 2022 க்கு இடையில் விலைகளை 49-53 சதவீதம் உயர்த்தக்கூடும்.
எரிவாயு விலை உயர்வு ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) ஆகிய நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற தனியார் நிறுவனங்களின் விளிம்புகளையும் அதிகரிக்க உதவும்.
ALSO READ: Big relief! விரைவில் மலிவான LPG இணைப்பு பெறலாம், முழு திட்டம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR