CNG விலை உயர்வு - ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

சி.என்.ஜி. ஓட்டுநர்கள். சி.என்.ஜி விலை ஒரு கிலோவுக்கு 70 பைசாவும், பி.என்.ஜி 91 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 2, 2021, 10:25 PM IST
  • டெல்லியில் தற்போது ஒரு கிலோ சி.என்.ஜி விலை ரூ .43.40 ஆக உயர்ந்துள்ளது.
  • கோவிட் -19 ஊரடங்கிலிருந்து தொடர்ந்து விலைகள் அதிகரித்து வருகிறது: ஆட்டோ டிரைவர்
  • இத்தகைய பணவீக்கத்தின் மத்தியில் அன்றாட தேவை மிகவும் கடினமாகி வருகிறது: ஆட்டோ டிரைவர்.
CNG விலை உயர்வு - ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! title=

Compressed Natural Gas Price Hike: சி.என்.ஜி. ஓட்டுநர்கள். சி.என்.ஜி விலை ஒரு கிலோவுக்கு 70 பைசாவும், பி.என்.ஜி 91 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. டெல்லியில் தற்போது ஒரு கிலோ சி.என்.ஜி விலை ரூ .43.40 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் பகுதியில் ஒரு கிலோவுக்கு 49.08 என்ற விகிதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

டெல்லி-என்.சி.ஆரில் சி.என்.ஜி (CNG) மற்றும் பி.என்.ஜி (PNG) விலைகள் தொடர்ந்து அதிகரித்ததால் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களை சிக்கலில் சிக்கியுள்ளது. இத்தகைய பணவீக்கத்தின் மத்தியில் அன்றாட தேவை மிகவும் கடினமாகி வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். எல்லா பொருட்களின் விலையும் உயர்கிறது. அது பெட்ரோல், டீசல், எல்பிஜி (LPG Cylinder) அல்லது பிஎன்ஜி (Piped Natural Gas) என எதுவாக இருந்தாலும், கோவிட் -19 (Covid-19 Lockdown) ஊரடங்கிலிருந்து தொடர்ந்து விலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் எங்களுக்கு உயிர்வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது என ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ |  இனி டென்ஷன் வேண்டாம்! CNG மற்றும் PNG இல் கேஷ்பேக் பெறலாம்!

சி.என்.ஜி (Compressed Natural Gas) விலை அதிகரித்துள்ளதால் எங்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ஆட்டோவின் செலவுகளைச் சுமப்பது எங்களுக்கு கடினமாக உள்ளது. சி.என்.ஜி டேங்க் நிரப்பப்படுவதற்கு ரூ .100 என இருந்தது, தற்போது ரூ .120 ஆகும் எனவும் ஆட்டோ டிரைவர் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் (Petrol-Diesel Rate Hike) விலை கடுமையாக அதிகரித்துள்ளது. சில நகரங்களில் பெட்ரோல் 100 ரூபாயைத் தொட்டது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்து எதிர்க்கட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது குறையும் என்று தன்னால் பதிலளிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 25 அன்று தெரிவித்திருந்தார். இருப்பினும், குளிர்காலம் முடிந்ததும் எரிபொருளின் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan)  தெரிவித்துள்ளார்.

ALSO READ |  Free Cooking Gas: இலவச சமையல் எரிவாயு இணைப்பு அறிய வாய்ப்பு! முந்துங்கள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News