வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்
வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுத்தால் செரிமான பிரச்சனைகள் வரும் என கூறப்படும் நிலையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
மிகவும் எளிமையான உணவு வாழைப்பழம். எல்லோரும் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய இதில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, ஃபோலேட், நியாசின், பி6, மாங்கனீஸ் ஆகிய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை கொடுக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதன் காரணமாகவே வாழைப்பழம் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. இதனை ஏழைகளின் ஆப்பிள் என்றும் கூறுவார்கள். அதேநேரத்தில் வாழைப்பழம் குறித்து பல கட்டுக் கதைகளும் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களிடம் வாழைப்பழம் அவர்களுக்கு உணவாக கொடுக்கலாமா? வேண்டாமா? என அடிக்கடி யோசிக்கிறார்கள்.
ஏனென்றால் வாழைப்பழம் குறித்து பொதுவாக பரவியிருக்கும் கட்டுக்கதைகளே இதற்கு காரணம். அதனால், குழந்தைகளுக்கு வாழைப்பழம் உணவாக கொடுக்கலாமா?, எப்படியெல்லாம் வாழைப்பழத்தை கொடுக்கலாம் என்பது குறித்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் சுரோஜித் குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | உடம்பில் இருக்கும் மச்சம் அதிர்ஷ்டமா அல்லது ஆபத்தா? உண்மை இதுதான்
* வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது குறித்து டாக்டர் சுரோஜித் குப்தா பேசும்போது, வாழைப்பழம் மென்மையாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் இருக்கும் உணவு என கூறியுள்ளார். ஆறு மாதங்கள் முடிந்தவுடன் குழந்தையின் உணவில் இதனை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், இதில் குழந்தைகளுக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
*எப்போதெல்லாம் வெளியில் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் பயண உணவாக வாழைப்பழத்தை கொடுக்கலாம் என மருத்துவர் சுரோஜித் குப்தா கூறுகிறார். இதனை எடுத்து செல்வதும் எளிது.
* குழந்தைக்கு முதல் முறையாக வாழைப்பழம் ஊட்டும்போது, வாழைப்பழம் முழுமையாக பழுத்திருக்க வேண்டும். அதன் பிறகு, வாழைப்பழத்தை நன்றாக மசித்து, சிறிதளவு பாலுடன் உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
* குழந்தைக்கு வாழைப்பழம் ஊட்டும்போது எப்போதும் அவரை உன்னிப்பாகக் கண்காணிக்கவும். வயதுக்கு ஏற்ப வாழைப்பழங்களின் அளவை படிப்படியாக அதிகரிக்கலாம்.
* வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து நல்ல செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து தண்ணீரில் கரையக்கூடியது. இது கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக மாற்றுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் குழந்தைக்கு உதவுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலை ஏற்படுத்தாது, மாறாக அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
* குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதால் அவர்களுக்கு எப்போதும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பழுத்த வாழைப்பழங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் குழந்தைக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.
* வாழைப்பழம் சளி, இருமல் பிரச்சனையை அதிகரிக்காது. கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, வாழைப்பழம் உங்கள் குழந்தைக்கு நல்ல சூப்பர் ஃபுட் என்று கூறுகிறார் குழந்தை சிறப்பு மருத்துவர் டாக்டர் சுரோஜித் குப்தா.
மேலும் படிக்க | இனி வெங்காயத் தோலை தூக்கி எறிய வேண்டாம்! இந்த விஷயங்களுக்கு உதவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ