இனி வெங்காயத் தோலை தூக்கி எறிய வேண்டாம்! இந்த விஷயங்களுக்கு உதவும்!

பெரும்பாலான இந்திய உணவுகளில் முதன்மையாக இருக்கும் பொருள் வெங்காயம் தான்.  பிரியாணி முதல் மசாலா தயாரிப்பது வரை அனைத்திற்கும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.

 

1 /6

பொதுவாக வெங்காயத்தில் அதிக நல்ல குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.  

2 /6

வெங்காயத்தில் மட்டுமின்றி அதன் தோல்களிலும் நிறைய சத்துக்களும் பயன்களும் உள்ளது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்  

3 /6

வெங்காயத்தின் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு அதனை முடிக்கு தடவி வந்தால் தலையில் உள்ள பொடுகு தொல்லை நீங்கும்.  

4 /6

கற்றாழை சாற்றுடன் வெங்காயத் தோலை சேர்த்து முடிக்கு தடவி வந்தால், முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. மேலும் தலையில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.  

5 /6

வெங்காயத்தின் தோல்களில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் உள்ளன.  இவை உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும்.    

6 /6

வெங்காயத் தோலை தண்ணீரில் ஊற வைத்து அதனை ஈ மற்றும் கொசு இருக்கும் இடத்தில் தெளித்தால் அவை மீண்டும் வராது.